முகப்பு /விருதுநகர் /

விருதுநகர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய படிவங்களை விண்ணப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்:-

விருதுநகர் நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் குழப்பம் உள்ளதாகவும் தவறு உள்ளதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. எனவே வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவர்கள் உடனடியாக உரிய படிவங்களில் விருதுநகர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு செய்தால் உடனடியாக திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரை இந்த திருத்தங்களை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் நகராட்சியைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நகராட்சி கமிஷனர் செய்யது முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்

First published:

Tags: Virudhunagar, Voter List