விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனைஅகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
நவீன கால தீண்டாமை சுவர் :
இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதிய பிரச்சனை மிக தீவிரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரும் கிராமும் ஊரும், சேரியும் என இரண்டு பிரிவாகவே இருந்து வந்துள்ளது. தற்போதும் இருந்து வருகிறது. தமிழகத்தில் இன்றும் பல கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக சமீபத்தில் வந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
இன்னும் சில இடங்களில் இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் வகையில் சுவர் ஒன்று கட்டப்பட்டிருக்கும். அதுதான் தீண்டாமை சுவர். தற்போது சமூக முன்னேற்றம் காரணமாக அனைத்து மக்களும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கையில் பட்டியலின மக்களை தங்களின் இருப்பிடத்திற்குள் வரவிடாமல் செய்ய கட்டப்பட்ட சுவர்களே இந்த நவீன தீண்டாமை சுவர்கள்.
இதையும் படிங்க : சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களை அனுமதிக்கும் நேரம் குறைப்பு - முழுவிவரம் இதோ...
அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது வ.புதுப்பட்டி எனும் அழகிய கிராமம். இங்குள்ள திரு.வி.க தெரு மற்றும் அம்பேத்கர் தெருவில் வெவ்வேறு பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களிடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது கலவரம் ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் அந்த இருபிரிவில் ஒருசாரார் தி.ரு.வி.க தெருவில் உள்ள பொதுப்பாதை வழியாக உள்ள மற்றொரு தெருவிற்குள் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.
இங்கு மற்றொரு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வருகையை விரும்பாத அவர்கள் கடந்த 2011-ம் ஆண்டுஇந்த பாதையை மறித்து சுவர் ஒன்று கட்டி விட்டதாக கூறப்படுகிறது.
தாங்கள் நெடுங்காலமாக பயன்படுத்தி வந்த பாதையை மறித்து சுவர் கட்டியிருப்பது தங்களின் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை என கூறி அந்த சுவற்றை அகற்ற வேண்டும் என தி.ரு.வி.க தெரு மக்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் இதற்கு சுப்ரமணியர் தெரு மக்கள் சார்பில்,இந்த தெருவில் உள்ள எங்கள் பள்ளிக்கு சொந்தமான இடம். பள்ளி விரிவாக்கத்திற்காவே இங்கு சுவர் கட்டியதாக கூறுகின்றனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் திரு.வி.க தெருவை சேர்ந்த பிரகாஷ், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆவணத்தில் சுவர் இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என்கிறார்.
இப்படி சுவர் பிரச்சனை பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வர பள்ளிக்கூடம் மற்றும் சுகாதாரம் வளாகம் அந்த பக்கம் தான் உள்ளது. தற்போது பாதை இல்லாத காரணத்தால் மாற்று பாதையில் செல்ல வேண்டியுள்ளது. அதனால் அந்த பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவதில்லை என்கின்றனர் திரு.வி.க தெரு பெண்கள்.
சமூக மாற்றம் தேவை :
2019ம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்தபோது அது பற்றி பெரிதாக பேசப்பட்டது. அந்த சுவரை, தீண்டாமை சுவர் என்றே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளப்படுத்தினர்.
தமிழகத்தின் பல கிராமங்களில் தீண்டாமைச் சுவர் மற்றும் தீண்டாமை கொடுமை உள்ளது. இன்றும் நிறைய கிராமங்களில் இரட்டை குவளை முறையும், வடக்கு பட்டி தெற்கு பட்டி என மக்களின் இருப்பிடத்தை கொண்டு அவர்களின் சாதியை அடையாளம் காணும் பழக்கம் உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்கு தான் அரசாங்கம் சமத்துவபுரங்களை கட்டியது. இந்தப் புதுப்பட்டி விவகாரத்தை பொறுத்தவரையில் இந்த சர்ச்சைக்குரிய சுவர் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar