ஹோம் /விருதுநகர் /

வாரிசு பட ரிலீசை திருவிழா போல் நள்ளிரவில் கொண்டாடிய விருதுநகர் விஜய் ரசிகர்கள்..

வாரிசு பட ரிலீசை திருவிழா போல் நள்ளிரவில் கொண்டாடிய விருதுநகர் விஜய் ரசிகர்கள்..

X
விருதுநகர்

விருதுநகர் - வாரிசு ரிலீஸ், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Varisu Celebration at Virudhunagar | வாரிசு பட வெளியீட்டை விஜய் ரசிகர்கள் விருதுநகரில் திருவிழா போல நள்ளிரவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாக இருந்த நிலையில், பட வெளியீட்டை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாரிசு திரைப்படம்:

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படமான வாரிசு திரைப்படம் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, விஜய் அவர்களின் ரசிகர்கள் உற்சாகமடைந்து கொண்டாடி வந்தனர்.

வாரிசை கொண்டாடிய விருதுநகர் விஜய் ரசிகர்கள்
வாரிசை கொண்டாடிய விருதுநகர் விஜய் ரசிகர்கள்

முன்னதாக படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ம் தேதி வெளியாகும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வாரிசு திருவிழா:

இதன்படி விருதுநகரில் அதிகாலை சிறப்பு காட்சியாக 4 மணிக்கு படம் திரையிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் நள்ளிரவு 12 மணி முதலே திரையரங்கு முன்பு குவிய தொடங்கி விட்டனர்.

விடிய விடிய காத்திருந்து அதிகாலை 3 மணியளவில் கொண்டாட தொடங்கி 4 மணிக்கு திரைப்படம் திரையிடப்படும் வரை ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தியேட்டர் முன் பட்டாசு வெடித்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

கொண்டாட்டத்தில் அடித்த மேள தாள சத்தத்தில் மெய் மறந்து ஆடிய விஜய் ரசிகர்கள் விஜய்யின் புகழ் பாடி கோஷமிட்டும், பட்டாசுகளை வெடித்தும் திரையரங்கை திருவிழா திடலாக மாற்றினர்.

First published:

Tags: Actor Vijay, Cinema, Kancheepuram, Local News, Varisu, Virudhunagar