Home /virudhunagar /

வெந்து தணிந்தது காடு.. ரசிகர்களை ஈர்த்ததா?- விருதுநகர் மக்களின் ரிவ்யூ...

வெந்து தணிந்தது காடு.. ரசிகர்களை ஈர்த்ததா?- விருதுநகர் மக்களின் ரிவ்யூ...

வெந்து

வெந்து தணிந்தது காடு

சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்துக்கு விருதுநகரில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் சிலம்பரசன், கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர் ரகுமான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இன்று தமிழகமெங்கும் படம் திரையிடப்பட்டது.

கலவையான விமர்சனங்கள்:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
காலை முதலே படம் பார்த்து விட்டு வெளி வந்த ரசிகர்களில் சிலர் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் மற்றும் சிலர் படம் நன்றாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.

விருதுநகரில் வெந்து தணிந்தது காடு:

விருதுநகரைப் பொருத்தவரை டவுன் பகுதியில் அப்சரா திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டது. முதல்வரின் வருகையால் காலை முதலே தியேட்டரில் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. படம் பார்த்த ரசிகர்களும் படம் பற்றி கலவையான விமர்சனங்களையே தெரிவித்தனர். வெந்து தணிந்தது காடு உண்மையில் தணிந்ததா? இல்லை பற்றி எரிந்ததா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி