ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மக்களே.. செங்கோட்டை செல்லும் இந்த ரயில்கள் ரத்து...

விருதுநகர் மக்களே.. செங்கோட்டை செல்லும் இந்த ரயில்கள் ரத்து...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகர் வழியே செல்லும் ரயில்கள் ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

பராமரிப்பு பணிகள் காரணமாக விருதுநகர் மார்க்கமாக செல்லும் செங்கோட்டை பயணிகள் ரயில் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ரத்து தொடர்பாக தென்னக இரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், ’வருகின்ற டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மதுரை ரயில்வே கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 11.30 க்கு மதுரையில் இருந்து விருதுநகர், ஶ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் இரயில் வண்டி எண்: 06663 மற்றும் 11.50 க்கு செங்கோட்டையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணிகள் இரயில் வண்டி எண்: 06664 ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்த ரயில்களில் பயணிக்க திட்டமிட்டுள்ளோர் மாற்று பயணத்திட்டங்களை ஏற்பாடு செய்து கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar