ஹோம் /விருதுநகர் /

புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டி நூதன முறையில் அன்னதானம் வழங்கிய விருதுநகர் வியாபாரிகள்

புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டி நூதன முறையில் அன்னதானம் வழங்கிய விருதுநகர் வியாபாரிகள்

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar New Bus Stand : விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வேண்டிக்கொண்டு விருதுநகர் வியாபாரிகள் அன்னதானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் புதிய பேருந்து நிலையம் அனைத்து தரப்பு மக்கள் ஆதரவுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என வேண்டிக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் நிலையில், இந்த முறை புதிய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலோடு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி நேற்று (ஜனவரி 6ம் தேதி) விருதுநகர் மெயின் பஜார் வீதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்துவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என நம்பப்படும் நிலையில் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அன்னதானம் பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Virudhunagar