Home /virudhunagar /

விருதுநகரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

விருதுநகரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajapalayam, India
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் சேத்தூர் உப மின்நிலையத்தில் நாளை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    ராஜபாளையம் கோட்டத்தில் சேத்தூர் உப மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராஜபாளையம் கோட்டத்தில் சேத்தூர் உப மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி