ஹோம் /விருதுநகர் /

தொடர் மழையால் நிரம்பிய தெப்பக்குளம்..! விருதுநகர் மக்கள் ஹேப்பி..!

தொடர் மழையால் நிரம்பிய தெப்பக்குளம்..! விருதுநகர் மக்கள் ஹேப்பி..!

X
தொடர்

தொடர் மழையால் நிரம்பிய தெப்பக்குளம்

Virudhunagar District News : விருதுநகரில் அமைந்துள்ள விருதுநகர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அதன் முழுக்கொள்ளவை எட்டி நிரம்பி காட்சியளிப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது விருதுநகர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம். இந்த குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மக்களின் நீர் தேவைக்காக வெட்டப்பட்ட நிலையில், அதன் பின்னர் பல கால கட்டங்களில் தூர்வாரப்பட்டு விருதுநகரின் நீர் மேலாண்மைக்கு சிறந்த ஒரு சான்றாக உள்ளது.

மொத்தம் மைய மண்டபத்துடன்,மூன்று கிணறுகளுடன் அமைந்துள்ள இந்த தெப்பக்குளத்தின் கொள்ளளவு 5 கோடியே 60 லட்சம் லிட்டராக உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் நீர் இருக்கும்பட்சத்தில் அருகில் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீரானது அதிகரித்து காணப்படும்.

இதனால் தெப்பக்குளத்திற்கு விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி குளத்தில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது, மேலும் அருகில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பின் மூலம் தெப்பக்குளத்தில் எப்போதும் நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சதுரகிரியில் மார்கழி தரிசனம்... 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு..

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையின் காரணமாக தெப்பக்குளம் வற்றாமல் இருந்து வந்த நிலையில், இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தெப்பக்குளம் அதன் முழுகொள்ளவான 5 கோடியே 60 லட்சம் லிட்டரை எட்டியுள்ளது.

விருதுநகரின் நீர் மேலாண்மைக்கு சிறந்த சான்றாக உள்ள மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் நிறைந்து காணப்படுவது, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar