ஹோம் /விருதுநகர் /

கார்த்திகை தீபத்திற்காக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விருதுநகர் கோயில்கள் 

கார்த்திகை தீபத்திற்காக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விருதுநகர் கோயில்கள் 

X
விளக்குகளால்

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விருதுநகர் கோயில்கள் 

Virudhunagar District News : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளன்று மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் அகல் விளக்கு ஏற்றி கொண்டாடுவர்.

அதன்படி கார்த்திகை தீபத்தின் முதல் நாள் விருதுநகரில் உள்ள முக்கிய கோயில்களான ஶ்ரீபாராசக்தி மாரியம்மன் கோயில், வால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வெயிலுகந்தம்மன் கோயில் மற்றும் சொக்கநாதர் கோயில்களில் அகல் விளக்குகள் ஏற்றி கோயில்களை அலங்கரித்திருந்தனர்.

இதையும் படிங்க : சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களை அனுமதிக்கும் நேரம் குறைப்பு - முழுவிவரம் இதோ...

அதிலும் விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட விளக்குகள் அதிக கவனம் பெற்றன. குறிப்பாக வீனை, அகல் விளக்கு, தாமரை போன்ற வடிவில் விளக்குகள் வரிசையாக ஏற்றப்பட்டிருந்தன. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏற்றப்பட்ட விளக்குகளில் எண்ணை ஊற்றி வழிபட்டு சென்றனர்.

இறுதியாக தேச பந்து மைதானம் மற்றும் சொக்கநாதர் கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Karthigai Deepam, Local News, Tamil News, Virudhunagar