புதுக்கோட்டை தீண்டாமை கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து விருதுநகரில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தநிலையில், விருதுநகரில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜனவரி 9-ம் தேதியன்று தமிழ்ப் புலிகள் சார்பில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதோடு, தீண்டாமைக்கு எதிராக கோஷங்களும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் அவர்கள் புதுக்கோட்டை சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து அதற்கு பதிலாக பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக்க வலியுறுத்தினர்.
ஆசிரியர் உழைப்பாலே இது சாத்தியம்- சிறந்த பள்ளி விருது பெற்ற சாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி
செய்தியாளர்: அழகேஷ்வரன், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.