ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான 18 வயதிற்கு உட்பட்ட யோகா போட்டியில் விருதுநகரை சேர்ந்த மாணவர்கள் இருவர் 2-ம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அண்மையில் ஹரியானாவில் KEHLO INDIA Youth Game நடத்தும் தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் Rhythmic Yoga 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விருதுநகரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் அபினேஷ் குமார் மற்றும் 10-வகுப்பு பயிலும் 16 வயதான பள்ளி மாணவர் கவிக்குமார் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் இருவரும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெள்ளி பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள் கூறியதாவது, “சமீபத்தில் ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் விருதுநகரை சேர்ந்த நாங்கள் இருவரும் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும்ம் போட்டிகளிலும் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடி தருவோம்” என்றனர்.
செய்தியாளர்: மணிகண்டன் விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.