முகப்பு /விருதுநகர் /

ஒரே இடத்தில் விதவிதமான 108 வகையான லிங்க தரிசனம் - விருதுநகரில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் புதிய முயற்சி

ஒரே இடத்தில் விதவிதமான 108 வகையான லிங்க தரிசனம் - விருதுநகரில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் புதிய முயற்சி

X
108

108 வகையான லிங்கங்கள்

Virudhunagar | விருதுநகரில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 லிங்க தரிசனம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 லிங்க தரிசனம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிவ லிங்கங்களை பார்வையிட்டு சென்றனர்.

விருதுநகரைச் சேர்ந்த பிரம்ம குமாரிகள் அமைப்பினர் விருதுநகரில் ஆன்மீக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 108 சிவலிங்கங்களை பொது மக்களின் பார்வைக்கு வைக்க முடிவு செய்து, விருதுநகர் ஆர்.எஸ் நகர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் தியான நிலையத்தில் 108 சிவலிங்கங்களை தரிசனத்திற்கு வைத்தனர்.

108 லிங்கங்கள்

ஒரே நேரத்தில் வெவ்வேறு வடிவங்களில் 108 லிங்கங்கள் வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

கடந்த 15 ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு லிங்கங்களை பார்வையிட்டு சென்றனர்.

108 லிங்கங்கள்

இதுகுறித்து பேசிய பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்த செல்வி, ‘மகா சிவராத்திரியின் முக்கியத்துவத்தையும், அதற்காக விரதம் இருக்கும் முறை பற்றி உணர்த்துவதற்காக தான் இந்த சிவலிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

சிவலிங்கங்களை பார்வையிட பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். அங்குவரும் பொதுமக்கள் ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Virudhunagar