Home /virudhunagar /

Virudhunagar | நலிவடைந்துவரும் அலுமினிய பாத்திரத் தயாரிப்பு தொழில்- அரசு உதவியை எதிர்பார்க்கும் உரிமையாளர்கள்

Virudhunagar | நலிவடைந்துவரும் அலுமினிய பாத்திரத் தயாரிப்பு தொழில்- அரசு உதவியை எதிர்பார்க்கும் உரிமையாளர்கள்

அலுமினிய

அலுமினிய பாத்திரத் தயாரிப்பு

மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக விருதுநகரில் அலுமினியப் பாத்திரத் தொழில்கள் நலிவடைந்துவருவதாக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
நாம் வீட்டில் தினமும் சமைக்க பயன்படுத்தி வந்த அலுமினிய பாத்திரங்களின் தயாரிப்பு நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில் அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது.

அலுமினிய பாத்திரங்கள் மவுசு குறைந்தற்கு காரணம் நான்ஸ்டிக் பாத்திரங்களின் வருகை தான் என்கிறார் அல்லம்பட்டியில் 25 ஆண்டுகளாக அலுமினிய பாத்திர தயாரிப்பில் ஈடுபட்டு வரும் குமரவேல். அவரின் தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது இந்த பாத்திரங்கள் முழுக்க முழுக்க உடலுழைப்பால் தயாராகின்றன.‌

வட்டமான அலுமினிய தட்டுகளை வளைத்து அதை பளபளப்பாக மாற்ற சுத்தியல் கொண்டு பாலீஷ் செய்கின்றனர். பாலீஷ் செய்யப்பட்ட பாத்திரங்கள் அதன் வடிவத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யபப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தயாரிக்கப்பட்ட அலுமினியப் பாத்திரங்கள்


தற்போது இதற்கான மவுசு குறைந்துள்ள நிலையில் இதற்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் இந்த தொழிலை நடத்த முடியாத நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அலுமினியப் பாத்திரத் தயாரிப்பு


1991ல் 10 தொழிலாளர்களைக் கொண்டு தொடங்கிய இந்த சிறு நிறுவனம் தற்போது இரண்டே இரண்டு பேரை கொண்டு இயங்கி வருகின்றது. இதன் மூலமே இந்த பாத்திர தொழில் கடந்த ஆண்டுகளில் எவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தயாரிக்கப்பட்ட அலுமினியப் பாத்திரங்கள்


அரசு தானாக முன்வந்து நலிவடைந்து வரும் இந்த தொழிலுக்கு எதாவது உதவி செய்து இந்த தொழிலை மீட்டெடுக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் பாத்திர தொழிலாளிகள்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி