விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு, சுந்தரலிங்கம், சந்தன லிங்கம் என்ற பெயர்களில் 2 திருமேனிகளாக சிவன் அருள்புரிகிறார்.
அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும், காயகற்ப மூலிகை வளம் நிறைந்ததுமாக இருக்கிறது இந்தத் தலம். அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
அந்த வகையில் சித்திரை 17-ம் தேதியான இன்று மாத பிரதோஷம், மற்றும் வருகின்ற புதன் கிழமை 19-ம் தேதி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும் 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களும் மலையேற அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பிரதோஷம் மற்றும் பெளர்ணமி நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sathuragiri, Virudhunagar