Union
Budget 2023

Highlights

ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் விவசாயிகள்..

விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் விவசாயிகள்..

X
விருதுநகர்

விருதுநகர் சம்பா வத்தல்கள்

Virudhunagar District News : விருதுநகர் சம்பா வத்தல்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என்று விவசாயிகள் காத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

புவிசார் குறியீட்டுக்கான விண்ணப்ப பட்டியலில் விருதுநகரின் மற்றொரு அடையாளமாக விளங்கும் சம்பா வத்தல்கள் இடம்பெற்றுள்ளது.

புவிசார் குறியீடு :

புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட பகுதியில் கிடைக்க கூடிய அந்த பகுதியின் பெயர் சொல்லும் வகையில் இருக்க கூடிய பொருட்களுக்கு தரப்படும் ஓர் அங்கீகாரம். இந்த குறியீடு மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அந்த அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இயலும்.

உதாரணமாக மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் விளைந்த மல்லிகையை மட்டுமே மதுரை மல்லி என்று விற்பனை செய்ய வேண்டும். விருதுநகரில் விளைந்த மல்லிகையை மதுரை மல்லி என்று விற்றால் புவிசார் குறியீடு பாதுகாப்பு சட்டத்தின் படி தண்டனை கிடைக்கும்.

இதுவரை தமிழ்நாட்டில் மதுரை மல்லி, தஞ்சை கலைத்தட்டு, ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு விருதுநகரின் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது‌.

இதையும் படிங்க : மதுரை பள்ளி மாணவிக்கு கடிதம் அனுப்பிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் மிளகாய் வத்தல் உற்பத்தியில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் தான் முன்னிலையில் உள்ளன. அதிலும் விருதுநகரில் தான் வத்தலை விற்க வத்தல் சந்தை உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் வத்தல்களும் இங்கு கொண்டு வந்து தான் சந்தைபடுத்தப்படுகிறது.

மிளகாய் வத்தல் ஒரு பணப்பயிர். விருதுநகரின் காலநிலைக்கு ஏற்றவாறு இருப்பதால்அருப்புக்கோட்டை, சாத்தூர் பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

உற்பத்தி அடிப்படையில் இந்திய அளவில் ஆந்திர மிளகாய்கள் முன்னிலையில் இருந்தாலும், சுவை அடிப்படையில் விருதுநகர் சம்பா வத்தலுக்கு காரம் அதிகம். அதனாலே விருதுநகர் வத்தலுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் விவசாயிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒருவேளை விருதுநகர் சம்பா வத்தல்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் அதன் மூலம் சாகுபடியை அதிகரிக்கலாம் என்கின்றனர் விவசாயிகள்.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Agriculture, Local News, Virudhunagar