பரோட்டா என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரோட்டா நினைவுக்கு வரும். சிலர் சிலோன் பரோட்டா என்பர் சிலர் பன் பரோட்டா என்பர். இன்னும் சிலர் வீச்சு பரோட்டா என்பர். எத்தனை வகைகள் இருந்தாலும் விருதுநகர் மக்களுக்கு பரோட்டா என்றாலே அது எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்த பொரிச்ச பரோட்டா தான்.
இந்த பரோட்டாவை எப்படி செய்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் நீண்ட நாள் இருந்து கொண்டே வந்தது. பரோட்டா செய்வது என்பது முழுக்க முழுக்க அதற்கான மாவு பிசைவதிலும் அதை வீசி எடுத்து தேய்ப்பதிலும் தான் உள்ளது என்கிறார் விருதுநகர் புரோட்டா மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி. புரோட்டா செய்வதில் உள்ள தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டே புரோட்டாவிற்கு மாவு பிசைய தொடங்கினார்.
பொதுவாக விருதுநகரில் மாலை நேரத்தில் பரோட்டா விற்பனை அதிகமாக இருந்தாலும் மதியமே அதற்கான விற்பனை தொடங்கி விடும். பரோட்டா மாவை எடுத்துக்கொண்டு அதில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிது நேரம் வைத்து விடுகின்றனர். பின்பு அதை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மீண்டும் சிறிது வைத்து விடுகின்றனர்.
பக்குவமாக மாவு பிசைந்து அதை தேய்த்து எடுத்தால் பரோட்டா வரும் இல்லை என்றால் பூரி போல் ஆகிவிடும் என்ற மாஸ்டர் சிறிய உருண்டைகளை பூரி போல தேய்த்து அதை டேபிளில் துணி துவைப்பது போல நன்கு வீசி அதை நான்காக மடித்து சுருட்டி வைத்தார்.
இதை வீட்டில் செய்யலாமா என கேட்டதற்கு பரோட்டா மாவு வீச தெரியும் என்றால் தாராளமாக வீட்டிலேயே செய்யலாம் என்றார். அருகில் உள்ள தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி புரோட்டா போட தயார் செய்து கொண்டிருந்தார்.
எண்ணெய் காய்ந்த உடன் சுருட்டி வைத்த மாவினை மீண்டும் தேய்த்து தோசை கல்லின் எண்ணெய் பகுதியை சுற்றி வைத்தார். வரிசையாக மாவினை தேய்த்து எண்ணெய்யை சுற்றி வட்ட வடிவில் வைத்தார். பின்பு ஒவ்வொரு புரோட்டாவாக நடுவில் உள்ள எண்ணெய்க்குள் இறங்கினர். கொதித்து கொண்டிருந்த எண்ணையின் சூட்டில் பரோட்டா பொன்னிறத்தில் ஜொலிக்க, புரோட்டாவை புரட்டி போட்டுக்கொண்டே, அவ்வளவு தான் புரோட்டா ரெடி.. இனி இத பிச்சு போட்டு, சால்னா ஊத்தி சாப்பிட வேண்டியது தான் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar