Union
Budget 2023

Highlights

ஹோம் /விருதுநகர் /

விருதுநகரை குளிர்வித்த மிதமான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

விருதுநகரை குளிர்வித்த மிதமான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

X
விருதுநகரில்

விருதுநகரில் மழை

Virudhunagar District News : விருதுநகர் நகரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் நேற்று மிதமான மழைப்பொழிவு ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில் தற்போது தமிழகமெங்கும் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு வரும் சுழலில், விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மிதமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. மதியம் 12 மணியளவில் தொடங்கிய மிதமான மழை பிற்பகல் இரண்டு மணி வரை நீடித்தது.

விருதுநகர், சிவகாசி உட்பட மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகமிதமான மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 0.6 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகள் வாழ்வதா..? சாவதா..? விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டர்களால் பரபரப்பு..

இதனால் ஏற்கனவே நிலவி வந்த வெப்பநிலை குறைந்து, தற்போது குளிர்ந்து வெப்பநிலை காணப்படுகிறது. ஏற்கனவே குளிர்காலம் துவங்கிவிடட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மிதமான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar