Home /virudhunagar /

விருதுநகரில் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா - பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் கொண்டாட்டம்

விருதுநகரில் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா - பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் கொண்டாட்டம்

விருதுநகர்

விருதுநகர் ரக்ஷா பந்தன்

விருதுநகரில் பிரம்ம குமாரி என்ற அமைப்பு இந்த மாதம் முழுவதும் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
ரக்ஷா பந்தன் விழா ஒரு வடநாட்டு பண்டிகை. சகோதரி, சகோதரன் கையில் ராக்கி கட்டும் நிகழ்வு என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்றே. பொதுவாக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த விழா பெரிய அளவில் கொண்டாடப்படுவது இல்லை.

மாறி வரும் உலக சூழலில் மக்களிடையே ஒற்றுமையின்மை பெருகி வருவதால் அனைவரிடமும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் நமது விருதுநகரில் ரக்ஷா பந்தன் விழாவை நடத்தி வருகின்றனர் பிரம்ம குமாரிகள் அமைப்பினர்.

ராக்கி கயிறு


விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரம்ம குமாரிகள் அமைப்பினர் மக்களுக்கு இலவசமாக தியான பயிற்சி வழங்கி வருவதோடு, நடந்து முடிந்த ரக்ஷா பந்தனை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கே ரக்ஷா பந்தன் விழாவை நடத்தி அதன் மூலம் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கு ராக்கி கயிறு


விழாவில் ஆண்- பெண் பேதமின்றி அனைவருக்கும் ராக்கி அணிவித்து சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

பிரம்ம குமாரி அமைப்பு


நிகழ்வில் பேசிய பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்த செல்வி, ‘தங்கள் அமைப்பு சார்பாக இந்த விழா தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுவதாகவும், நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். அப்படியென்றால் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்ற ஆன்மிக அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி