முகப்பு /விருதுநகர் /

"பாபா படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும்" - விருதுநகர் ரசிகர்கள் கருத்து

"பாபா படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும்" - விருதுநகர் ரசிகர்கள் கருத்து

X
பாபா

பாபா மறுவெளியீடு

விருதுநகரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பாபா படத்தின் மறுவெளியீட்டை ரசித்துவருகின்றனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

ரஜினிகாந்த் நடிப்பில் 2002ல் வெளியான பாபா படம் தற்போது மீண்டும் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பாபா படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது இஷ்ட தெய்வமான பாபாவுக்கு நெருக்கமான கதையை எழுதி நடிக்க, ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாமலை, பாட்ஷா போன்ற ஹிட் படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரஜினியே இந்த படத்தை தயாரித்த நிலையில், ரஜினியுடன் நம்பியார், மணிஷா கொய்ராலா, கவுண்ட மணி போன்றோர் இப்படத்தில் இருந்ததால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் திரையிட்ட பின்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்து படம் தோல்வியை தழுவியது. படத்தில் வரும் பாபா முத்திரை மற்றும் பாபா கத்தி போன்றவை குழந்தைகளை பெரிதும் கவர்ந்திருந்த போதிலும் படம் போகவில்லை. இந்நிலையில் 20 வருடங்களுக்கு பின் பாபா படம் சில மாற்றங்களுடன் மீண்டும் திரையிட போவதாக அறிவிப்பு வெளியான உடன், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின் பாபாவை மீண்டும் திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

பாபா பார்ட் 2 வேண்டும்

விருதுநகரில் 13 ம் தேதி பாபா படம் வெளியிடப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் பலர் ரஜினிக்கு நிகர் ரஜினி தான் என்றும், படத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தற்போதைய காலத்திற்கு பொருந்துவதாகவும், ஒரு வேளை பாபா படம் தற்போது வெளியிடப்பட்டிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்தனர்.

இன்னும் சிலர் பாபா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளில் பாபா படத்தை டீவியில் பார்த்து பழகியிருந்தாலும், பாபா படம் திரையிடப்பட்ட உடன் ரசிகர்கள் திரையரங்கு நோக்கி வருவது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar