ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் ரயில் நிலையத்தில் செயல்படாத தண்ணீர் விநியோகிக்கும் இயந்திரம்.. தண்ணீரை அதிக விலைக்கு வாங்கும் அவலத்தில் பயணிகள்

விருதுநகர் ரயில் நிலையத்தில் செயல்படாத தண்ணீர் விநியோகிக்கும் இயந்திரம்.. தண்ணீரை அதிக விலைக்கு வாங்கும் அவலத்தில் பயணிகள்

X
செயல்படாத

செயல்படாத தண்ணீர் விநியோகிக்கும் இயந்திரம்

Virudhunagar District News : விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் தண்ணீர் பிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள வாட்டர் பாயிண்ட் நீண்ட காலமாக செயல்படாமல், பூட்டியபடியே இருப்பதால் பயணிகள் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் தண்ணீர் பிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள வாட்டர் பாயிண்ட் நீண்ட காலமாக செயல்படாமல், பூட்டியபடியே இருப்பதால் பயணிகள் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரயில் பயணிகள் பயணத்தின்போது தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்கு இந்திய இரயில்வே சார்பில் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வாட்டர் பாயிண்ட் எனப்படும் வாட்டர் வென்டிங் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி இந்த இயந்திரத்தில் பயணிகள் பணம் செலுத்தி தேவைக்கேற்ப 300 மி.லி முதல் 5 லிட்டர் வரை தாங்கள் கொண்டு வந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : சாத்தூர் காவலரை வெகுவாக பாராட்டிய விருதுநகர் எஸ்.பி - ஏன் தெரியுமா?

ஒருவேளை வாட்டர் பாட்டில் இல்லை என்றால் அதற்கும் கட்டணம் செலுத்தி தண்ணீர் பிடித்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. மிக குறைந்த விலையில் தரமான குடிநீர் கிடைத்தால் பயணிகள் மத்தியில் இந்த வாட்டர் பாயிண்ட்க்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், விருதுநகர் இரயில் நிலையத்தில் உள்ள வாட்டர் பாயிண்ட் நீண்ட காலமாக செயல்படாமல் பூட்டியபடியே உள்ளது.

தென் தமிழகத்தின் முக்கிய ரயில் சந்திப்பாக உள்ள விருதுநகர் ரயில் நிலையத்திற்கு தினசரி நிறைய பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில், இப்படி வாட்டர் பாயிண்ட் பூட்டி காணப்படுவதால் அவர்கள் குடிநீருக்காக வெளியில் அதிக விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நீதிமன்ற வழக்கு :

வாட்டர் பாயிண்ட்ல் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தான் வாட்டர் பாயிண்ட் பூட்டி உள்ளது என அறியப்படும் நிலையில், ரயில்வே நலனை கருத்தில் கொண்டு விரைவில் வாட்டர் பாயிண்டை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar