ஹோம் /விருதுநகர் /

சாத்தூர் காவலரை வெகுவாக பாராட்டிய விருதுநகர் எஸ்.பி - ஏன் தெரியுமா?

சாத்தூர் காவலரை வெகுவாக பாராட்டிய விருதுநகர் எஸ்.பி - ஏன் தெரியுமா?

காவலரை பாராட்டிய எஸ்.பி

காவலரை பாராட்டிய எஸ்.பி

Virudhunagar District News : சாத்தூர் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் நேற்று (21.12.22) அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், நிகழ்வில் முன்னதாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் காவல்துறை செயல்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கினார்.

இதனைத்தொடர்ந்து சாத்தூரில் உள்ள ஆசிரியான அன்னலட்சுமியின் செயினை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அறுத்து சென்ற நிலையில், தாயில்பட்டியில் ரோந்து பணியில் இருந்த காவலர் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று இருவரையும் பிடித்து செயினை மீட்டார்.

இதையும் படிங்க : மார்கழி அமாவாசையில் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி 

இந்நிலையில், காவலர் சதீஷின் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar