Home /virudhunagar /

தென்றல் தவழும் பிளவக்கல் அணை திறப்பு எப்போது? சுற்றுலா பயணிகள் ஏக்கம்

தென்றல் தவழும் பிளவக்கல் அணை திறப்பு எப்போது? சுற்றுலா பயணிகள் ஏக்கம்

பிளவக்கல் அணை

பிளவக்கல் அணை

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையான பிளவக்கல் அணை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் அணை. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையான பிளவக்கல் அணை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் அணை.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பிளவக்கல் அணையில் தேங்கும்படி பிளவக்கல் பகுதியில் அணை கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 48 அடி இதன் மூலம் சுற்றியுள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சுற்றுலா தளம்:

    சிறப்புமிக்க இந்த அணை மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வெயிலை மட்டுமே பார்த்து வரும் கந்தக பூமி மக்களுக்கு இயற்கை வனப்புமிக்க இந்த பிளவக்கல் அணை ஒரு வரப்பிரசதமாய் விளங்குகிறது.

    பிளவக்கல் அணை


    இதன் இயற்கை சூழல் காரணமாக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல துவங்கினர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கடந்த 30.04.2002 அழகிய சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது.

    பிளவக்கல் அணை வாயில்


    இதனால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கியது. லீவ் விட்டா போதும் விருதுநகர்வாசிகள் இந்த அணைக்கு வந்து குளிப்பது, பூங்காவில் குடும்பத்தோடு வந்து நேரம் செலவிடுவது என பொழுது போக்கி வந்தனர். இதை நம்பி மீன் உணவகம் போன்ற சிறுவியாபாரிகளும் பயன்பெற்று வந்தனர்.

    பிளவக்கல் அணை


    சிறுவர் பூங்கா சேதம்:

    ஆனால் காலப்போக்கில் சிறுவர் பூங்கா முறையாக பராமரிப்பு இன்றி முற்றிலும் செயல் இழந்து பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஆனாலும் அணையை பார்வையிட சிலர் வந்து சென்றனர்.

    பிளவக்கல் அணை


    கடைசியில் அதற்கும் கொரோனா வந்து முடிவு கட்டிவிட்டது. லாக்டவுன் காலத்தில் அணை பூட்டப்பட்டு ஆட்கள் போக்குவரத்து இல்லாமல் போனதால் வனவிலங்குகள் நடமாட ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பிளவக்கல் அணை


    இது குறித்து அணையின் உதவிப் பொறியாளரைத் தொடர்பு கொண்ட போது, ’அவர் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அணை பூட்டப்பட்டுள்ளதாகவும், வன விலங்குகள் உள்ளே வராதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன. அவை முடிந்த பின்னர் அணை மீண்டும் திறக்கப்படும் என தெரிவித்தார்.

    அணை பூட்டப்பட்டுள்ள விஷயம் தெரியாத பலர் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். விரைவில் அணை திறக்கப்பட்டு, பழுதடைந்த பூங்காவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி