முகப்பு /விருதுநகர் /

நிழற்குடை, அடிப்படை வசதிகள் இல்லை.. வெளியூர் பேருந்துக்காக வெயிலில் காயும் விருதுநகர் மக்கள்

நிழற்குடை, அடிப்படை வசதிகள் இல்லை.. வெளியூர் பேருந்துக்காக வெயிலில் காயும் விருதுநகர் மக்கள்

X
விருதுநகரில்

விருதுநகரில் வெளியூர் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் மக்கள்

Virudhunagar News : விருதுநகரில் வெளியூர் பேருந்து நிறுத்தமாக இருந்து வரும் மீனாம்பிகை பங்களா பகுதியில், நிழற்குடை இல்லாத காரணத்தால் பயணிகள் வெயிலில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மீனாம்பிகை பங்களா பகுதி. இங்கு தான் சிவகாசியில் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், விருதுநகர் பயணிகளை ஏற்றியும் இறங்கியும் செல்கின்றன. ஏற்கனவே விருதுநகரில் இருந்து எந்தவொரு நேரடி வெளியூர் பேருந்தும் இயக்கப்படாத நிலையில், விருதுநகர் மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் மீனாம்பிகை பங்களா பகுதிக்கு தான் வர வேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு நிழற்குடை இல்லாமல் இருப்பதால் பயணிகள் வெயில் மற்றும் மழை நேரத்தில் நிற்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், பேருந்திற்காக வெயிலில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பேருந்து நிறுத்தம் அமைக்க மீனாம்பிகை பங்களா பகுதியில் போதிய இடவசதி இல்லாதநிலையில், இதுபற்றி பேசிய விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் காளிதாஸ் பேசிய போது, மீனாம்பிகை பங்களா மூன்று வழித்தடங்கள் சந்திக்கும் பகுதி என்பதால் அதிக நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பேருந்து நிறுத்ததை சற்று தொலைவில் மாவட்ட மைய நூலகம் அருகே அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம் என்றார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar