ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் முதன்முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழா- உற்சாகமாக வரவேற்பு தந்த பொதுமக்கள்

விருதுநகரில் முதன்முறையாக நடைபெறும் புத்தகத் திருவிழா- உற்சாகமாக வரவேற்பு தந்த பொதுமக்கள்

விருதுநகர்

விருதுநகர் புத்தகத் திருவிழா

Virudhunagar | விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்று வரும் புத்தக திருவிழா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்று வரும் புத்தக திருவிழா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நகர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

விருதுநகரில் முதல் முறையாக புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 17 ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழாவின் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.ஆனந்தகுமார் மற்றும் எழுத்தாளர்கள் த.ஸ்டாலின் குணசேகரன், எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

இதில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் என்பதால் அவரை காண நிறைய எழுத்தாளர்களும், மக்களும் வந்திருந்தனர்.

விருதுநகர் புத்தகத் திருவிழா 

நூலக மனிதர்கள்:

இதுகுறித்து பேசிய எழுத்தாளர் எஸ்.இராமசந்திரன், ‘ரசிகர்களான எஸ்.ராவின் நூலக மனிதர்கள் அமைப்பினர் தாங்கள் எஸ்.இராவின் தீவிர இரசிகர்கள் என்றும், அவரது பேச்சு மிகவும் இனிமையாக இருக்கும் அதை கேட்கவே, இங்கு வந்தோம்.

விருதுநகர் புத்தகத் திருவிழா

வந்த பின்னர் இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட புத்தக அரங்குகளை கண்டு வியப்படைந்தோம் என்று தெரிவித்தனர். விருதுநகரின் முதல் புத்தக திருவிழாவில் எங்களின் வருகையை பதிவு செய்தது பெருமையாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மண்ணின் மைந்தர்:

புகழ் பெற்ற எழுத்தாளர் எஸ்.இரா விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணற்றை சேர்ந்தவர். அவர் பிறந்த ஊரில் பணியாற்றுவது பெருமையளிப்பதாக தெரிவித்தார். அங்கு வந்திருந்த மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் ராம் குமார்.

பொன்னியின் செல்வன்:

அரங்கில் சுற்றி திரிந்த பள்ளி மாணவர்கள் பலர் புத்தக கண்காட்சி வியக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், பொன்னியின் செல்வன் படம் பார்த்ததில் இருந்து அந்த நாவலை வாங்கி படிக்க ஆர்வம் வந்துள்ளதாகவும், அதை தேடி தான் இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

விருதுநகர் வரலாற்றை தொகுக்க வேண்டும் :

விழா அரங்கில் பேசிய எழுத்தாளர் எஸ்‌.இரா, ‘விருதுநகர் மாவட்டத்தில் எத்தனையோ பண்பாட்டு பெருமைகளும், வரலாற்று பெருமைகளும் இருந்தாலும், அது பற்றி போதிய விழிப்புணர்வு நம் மக்களுக்கு இல்லை. அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் விருதுநகர் மாவட்ட வரலாற்று பெருமைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட அனைவரும் முன்வர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar