ஹோம் /விருதுநகர் /

என்னடா பகல் கொள்ளையா இருக்கு? புதிய அபராத விதியால் விழிப்பிதுங்கும் விருதுநகர் மக்கள்!

என்னடா பகல் கொள்ளையா இருக்கு? புதிய அபராத விதியால் விழிப்பிதுங்கும் விருதுநகர் மக்கள்!

X
விருதுநகர்

விருதுநகர் மக்கள் வேதனை

Virudhunagar | புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களின் சுமையை அதிகரிக்கும் வண்ணம் உள்ளதாக விருதுநகர் மக்கள் வேதனை.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களின் சுமையை அதிகரிக்கும் வண்ணம் உள்ளதாக விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்து, தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் மத்தியில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இனிமேல் உயிருக்கு பயந்து தலைக்கவசம் போடுகிறமோ இல்லையோ இந்த சட்டத்தினால் வரும் அபராத தொகைக்கு பயந்தாவது தலைக்கவசம் அணியும் நிலைக்கு வந்து விட்டனர் வாகன ஓட்டிகள். புதிய விதிகள் ஏதும் இல்லாமல் ஏற்கனவே உள்ள விதிமீறல்களுக்கு அபராதம் மட்டும் பத்துமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என்று அபராதம் கட்டி விட்டு புலம்பி வருகின்றனர்.

இது பொது மக்கள் மற்றும் வாடகை வண்டி ஓட்டுவோரின் சுமையை மேலும் அதிகரிக்கும் என்று விமர்சிக்கின்றனர் விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்.விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் முருகன் மற்றும் நேரு இது குறித்து பேசும் போது, இந்த சட்டம் வாடகை வண்டி ஓட்டுவோரை கடுமையாக பாதித்துள்ளது. ஒரு ட்ரிப்பிற்கு 200 ரூபாய் தான் வருமானமாக கிடைக்கும் நிலையில், அதிலும் இப்படி அதிக அபராதம் விதித்தால் அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆவது என்று கேள்வி எழுப்பினர். விதிமீறலுக்கு அபராதம் விதிக்கலாம் தான் ஆனால் அதற்கு வரைமுறை இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து பேசியவர்கள் இதில்

இரு சக்கர வாகன ஓட்டுவோர் நிலை தான் கொடுமையாக உள்ளது. 1000, 2000 என்று தொட்டதற்கெல்லாம் அபராதம் விதிப்பது அவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க | “தேவையானதை எடுக்கலாம்.. தேவையற்றதை வைக்கலாம்..“ அருப்புக்கோட்டையில் பேரன்பை பறைசாற்றும் அன்புச் சுவர்..

தலைக்கவசம் வழங்கலாமே:

இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் பேசுகையில், தலைக்கவசம் போடவில்லை என்றால் 1,000 ரூபாய் அபராதம் என்கின்றனர். ஆனால் ஒரு தலைக்கவசம் 500 ரூபாய் தான். அபராத தொகையில் ஒரு ஹெல்மெட் வழங்கலாம். சட்டங்களும், விதிமுறைகளும், தண்டனைகளும் எங்களை சீர்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமேதவிர அபராதம் என்ற பெயரில் எங்களை மேலும் கஷ்டத்திற்கு ஆளாக்க கூடாது என்று அவர் தெரிவித்தார்.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தான் வந்துள்ளது எனினும்இதனால் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இதனை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது.

First published:

Tags: Local News, Traffic Police, Traffic Rules, Virudhunagar