ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தி மக்கள் உற்சாகம்

விருதுநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தி மக்கள் உற்சாகம்

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News : விருதுநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மக்கள் சொக்கப்பனை கொளுத்தி கொண்டாடினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொக்கப்பனை கொளுத்துதல் :

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான கார்த்திகை திருநாளன்று கோயில்களில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு சொக்கப்பனை கொளுத்துதல். இது பெரும்பாலும் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களில் நடக்கும்.

கார்த்திகை தீபத்திற்காக அனைவரும் தங்கள் இல்லங்களில் அகல் விளக்கு ஏற்றியும் மலைமுகடுகளில் தீப்பந்தம் ஏற்றியும் வழிபடுவர். இதன் தொடர்ச்சியாக நடைபெறுவது தான் இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு.

இதையும் படிங்க : விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

அதன்படி திருநாளன்று ஆலய வாசலில் பனை மரம் ஒன்றை நட்டு வைத்து, அதை சுற்றி காய்ந்த பனையோலைகளை கூம்பு வடிவில் கட்டி வைப்பர். பின்னர் பூஜைகளை முடித்து சுவாமி தேரில் எழுந்தருளி சொக்கப்பனை முன்பு வந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருவிழாவில் மக்கள், எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக கருதி வழிபடுவர். ஒவ்வொரு கார்த்திகை தீபத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு என்பதால், விருதுநகரில் உள்ள புகழ்பெற்ற மற்றும் பழமையான சொக்கநாதர் கோயிலில் சுவாமி தேரில் எழுந்தருளி, முருகன் வள்ளி தெய்வானையுடன் எதிர் சேவை செய்ய பக்தர்கள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

First published:

Tags: Local News, Tamil News, Virudhunagar