ஹோம் /விருதுநகர் /

புதிய அவதாரம் எடுத்துள்ள அவதார்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? விருதுநகர் ரசிகர்களின் கருத்து..

புதிய அவதாரம் எடுத்துள்ள அவதார்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? விருதுநகர் ரசிகர்களின் கருத்து..

X
அவதார்

அவதார் படம் குறித்து ரசிகர்களின் கருத்து

Virudhunagar District News : ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் படம் குறித்து விருதுநகர் மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களின் கனவு என்று கூறப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே 2009 ல் வெளியாகி உலக முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின்பு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் தாக்கத்தினாலே இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

முதல் பாகம் அளவிற்கு இல்லை!

படம் நன்றாக தான் உள்ளது. ஆனால் முதல் பாகம் அளவிற்கு இல்லை. ஒரு வேளை அதிக எதிர்பார்ப்புடன் வந்ததால் இப்படி இருக்கலாம். படம் ஒரு முறை பார்க்கலாம் என சிலர் கூறினர்.

நீளமான படம் :

இன்னும் சிலர் படம் நீளமாக உள்ளது மற்றும் மெதுவாக கதை நகர்வதால் சலிப்பு ஏற்படுகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

விஷுவல் விருந்து :

முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் படத்தின் விஷுவல் காட்சி மற்றும் க்ராபிக்ஸ் அருமையாக உள்ளது. அதிலும் இதையெல்லாம் 3 டியில் பார்க்க அருமையாக உள்ளது. குடும்பத்தினருடன் அனைவரும் வந்து பார்க்க கூடிய ஒரு படம் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள அவதார் படம் இனி வரும் விடுமுறை நாட்கள் வைத்து கணக்கிட்டு பார்க்கும் போது கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar