ஹோம் /விருதுநகர் /

பூக்களே இல்லாத பூங்காவுக்கு செலவு மட்டும் ரூ.1 கோடி: பூங்கா சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் கேள்வி

பூக்களே இல்லாத பூங்காவுக்கு செலவு மட்டும் ரூ.1 கோடி: பூங்கா சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் கேள்வி

மோசமான நிலையில் பூங்கா

மோசமான நிலையில் பூங்கா

1 கோடி ரூபாய் செலவிற்கு பூங்காவின் தரம் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே அனைவரின் பதிலாக இருக்கும். அந்த அளவிற்கு பூங்காவின் நிலை காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

போதிய பராமரிப்பின்றி விருதுநகர் நகராட்சி பூங்கா புதர் மண்டி காணப்படுகிறது. இதை சரி செய்து பூங்காவை மீட்டெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் கல்லூரி சாலையில் முதல் பகுதியில் நகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியும், நடுப்பகுதியில் பூங்காவும், அதையடுத்து சங்கரலிங்கனார் மணி மண்டபமும் அமைந்துள்ளன.

இதில் நடுப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவை, விருதுநகர் நகராட்சியின் நூற்றண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு பூங்காவாக மாற்ற முடிவு செய்து இதற்கென கடந்த 2014 - 15 ம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூங்காவை சீரமைத்தனர்.

புதர்கள் மண்டி பூங்கா

1 கோடி ரூபாய் செலவிற்கு பூங்காவின் தரம் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே அனைவரின் பதிலாக இருக்கும். அந்த அளவிற்கு பூங்காவின் நிலை காணப்படுகிறது. நடை பயிற்சி மேற்கொள்ள வசதியாக பேவர் பிளாக் கற்கள் கொண்டு, நடைபாதை அமைத்துள்ளனர்.

தண்ணீர் இல்லாத தண்ணீர் தொட்டி

அதுவும் ஆங்காங்கே மேடுபள்ளமாக காணப்படுகிறது. பூங்காவின் பெரும்பாலன பகுதிகளில் புதர் மண்டி காணப்படுவதால், பூச்சிகள் வந்து தங்கும் அபாயம் உள்ளது. இதனால் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சத்துடனே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது.

விருதுநகர் பூங்கா

முதலில் இருந்த பழைய பூங்காவில் சிறுவர் விளையாடுவதற்கென ஊஞ்சல் போன்ற நிறைய விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. ஆனால் தற்போது குறைந்த அளவிலே காணப்படுகிறது.

இதுபோக பூங்காவில் ஆங்காங்கே தொட்டிகள் கட்டி செயற்கை நீரூற்றுகள் அமைத்துள்ளனர்.

விருதுநகர் பூங்கா

ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை செயல்படாமல் கழிவுநீர் தேங்கி கொசுக்களின் வாழ்விடமாக திகழ்கின்றன. மாலை நேரத்தில் மின்விளக்குகளும் குறைவாக காணப்படுவதால் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் இருப்பிடமாக இருக்கிறது.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கென ஒரு சிறிய கேன்டீனும் கட்டியுள்ளனர். அதுவும் நீண்ட காலமாக பூட்டியே காணப்படுகிறது. பூக்களே இல்லாத பூங்காவுக்கு ஒரு கோடி செலவா? இதற்கு பதிலாக முன்னாடி இருந்த பூங்கா எவ்வளவோ பரவயில்ல என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது இருக்கும் நகராட்சி நிர்வாகமாவது இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை மீட்டெடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar