ஹோம் /விருதுநகர் /

Virudhunagar | மிலிட்ரியில் சேரணும்.. சயிண்ட்டிஸ்ட் ஆகணும்... பெருங் கனவுகளை சுமந்து நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள்

Virudhunagar | மிலிட்ரியில் சேரணும்.. சயிண்ட்டிஸ்ட் ஆகணும்... பெருங் கனவுகளை சுமந்து நிற்கும் ஆதரவற்ற குழந்தைகள்

விருதுநகர்

விருதுநகர் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம்

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டியில் செயல்பட்டுவரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பெருங் கனவுகளுடன் பல குழந்தைகள் வாழ்ந்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

பசுமை போர்த்திய பூவுலகில் பூத்த பூக்களாம் குழந்தைகள்... அவர்களின் குழந்தைத்தனமான அத்தனை செயல்களுமே ரசிக்கும்படி இருக்கும். துள்ளி விளையாடும் வயதுடைய இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பும், அன்பும் ஆதரவும் கிடைக்க கூடிய இடம் எது என்று கேட்டால் நாம் அனைவரும் குடும்பம் தான் என்போம். ஆனால் இப்பூமியில் குடும்பங்களற்று, ஆதரவின்றி வாழ்கின்ற எத்தனையோ குழந்தைகள் இருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் ஆதரவற்ற மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெற்றோரை இழந்த, பெற்றோரால் கைவிடப்பட்ட, வறுமையால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.

விளையாடி மகிழும் குழந்தைகள்

ஒரு விடுமுறை தினத்தில் அவர்களை சந்திக்க சென்றிருந்த போது அங்கு விருதுநகரில் நிறைய மருத்துவ முகாம்கள் நடத்தி சேவை செய்து வரும் ஏ.என்.டி அறக்கட்டளையினர் வந்திருந்தனர்.

விளையாடி மகிழும் குழந்தைகள்

ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளின் மனதில் இருக்கும் தனக்கென யாரும் இல்லை என்ற எண்ணத்தை போக்க, ‘மாதம் ஒரு நாள் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் என்ற பெயரில் அவர்களை சந்திக்கும் நிகழ்வு நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய ஏ.என்.டி அறக்கட்டளையின் தலைவர் ஜெயராஜசேகர் இன்றைய நாள் முழுவதும் அவர்களோடு நேரம் செலவிட்டது மனநிறைவை தந்ததாகவும், அவர்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்திருக்கும் என நம்புவதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அங்கிருந்த குழந்தைகள் சிலரோடு பேசியதில் அவர்கள் அனைவரும் உயர்ந்த லட்சியத்தோடு இருக்கின்றனர் என புரிந்து கொள்ள முடிந்தது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தான் மிலிட்டரியில் சேரனும் என்று கூறியது இன்றும் நினைவில் நிற்கிறது. இந்த வயதிலேயும் தன்னுடைய சூழலை புரிந்து கொண்டு மனப்பக்குவத்துடன் அவர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்கு சரியான அன்பும் ஆதரவும் கொடுத்தால் அவர்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறுவர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar