முகப்பு /விருதுநகர் /

திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத விருதுநகர் புதிய பேருந்து நிலையம்..

திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத விருதுநகர் புதிய பேருந்து நிலையம்..

X
புதிய

புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

Virudhunagar New Bus Stand | ஜனவரி 26 முதல் புதிய பேருந்து நிலையம் என அறிவித்தபடி பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் கடந்த 30 ஆண்டுகளாக  செயல்படாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில்தான் புதிய பேருந்து நிலையமானது ஜனவரி 26-ம் தேதி முதல் செயல்பாட்டு வரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகமானது அறிவிப்போடு நில்லாமல் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டது. இதன்காரணமாக இந்த முறையாவது அறிவித்த படி பேருந்துநிலையம் செயல்பாட்டுக்கு வரும் என காத்திருந்திருந்த மாவட்ட மக்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதன்காரணமாக அறிவித்த படி புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தன்று புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இனியும் புதிய பேருந்து நிலையம் செயல்படுவதில் கால தாமதம் ஏற்பட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tamil News, Virudhunagar