ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் | செயல்பாட்டுக்கு வரும் புதிய பேருந்து நிலையம்? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

விருதுநகர் | செயல்பாட்டுக்கு வரும் புதிய பேருந்து நிலையம்? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

X
விருதுநகர்

விருதுநகர் புதிய பேருந்து நிலையம்

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முப்பது ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வருவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முப்பது ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இம்முறையாவது சொன்னபடி புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் விருதுநகர் மக்கள்.

விருதுநகரில் இருந்து சாத்தூர்செல்லும் சாலையில் அமைந்துள்ளது விருதுநகர் புதிய பேருந்து நிலையம். விருதுநகரில் இருந்து வெளியூர் பேருந்துகளை இயக்குவதற்காக கட்டப்பட்ட இப்பேருந்து நிலையமானது செயல்பாட்டுக்கே வராமல் முப்பது ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இது தொடர்பாக மக்கள் குரல் கொடுத்தும், ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டும் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

தற்போது கடந்த சில வாரங்களாக புதிய பேருந்து நிலையம் பற்றி அதிகம் பேசப்பட்ட நிலையில், ஜனவரி 9 அன்று அனைத்து கட்சிகள் சார்பில் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் ஜனவரி 26 முதல் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பொதுமக்கள் சிலர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும், தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளான தூத்துக்குடி, நெல்லை நாகர்கோவில் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் வந்து செல்வதை உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே புதிய பேருந்து நிலையம் சிறப்பாக செயல்படும் என்றனர்.

புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு முறையும் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துவதாக கூறி மக்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றி வரும் நிலையில், இந்த முறையாவது சொன்னபடி புதிய பேருந்து நிலையம் செயல்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையே உள்ளது.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar