ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நான்கு யுகங்களை விளக்கும் நவராத்திரி கொலு பொம்மைகள்

விருதுநகரில் நான்கு யுகங்களை விளக்கும் நவராத்திரி கொலு பொம்மைகள்

கொலு

கொலு கண்காட்சி

Virudhunagar | விருதுநகரில் நான்கு யுகங்களை விளக்கும் வகையில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலு பொம்மைகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நவராத்திரியை முன்னனிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி நடத்தினர். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பொம்மைகளை பார்வையிட்டு சென்றனர்.

நவராத்திரி விழா நடைபெற்று வருவதால் ஆங்காங்கே கொலு பொம்மைகள் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பிரம்ம குமாரிகள் அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக கொலு பொம்மைகள் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.

இவர்களின் கொலுவில் சற்று மாறுதலாக சத்திய யுகம், திரேதா யுகம் , துவாபர யுகம், கலியுகம் போன்ற யுகங்களை ஆன்மிக அடிப்படையில் விளக்கும் கொலு பொம்மைகள்களை வைத்திருந்தனர்.

யுகங்களை விவரிக்கும் கொலு பொம்மைகள்

சத்திய யுகத்தில் கிருஷ்ணனின் பால்ய பருவம் முதல் பட்டாபிஷேகம் வரை நடக்கும் நிகழ்வுகளை விளக்கும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அடுத்து திரேதா யுகத்தில் ராமர் பட்டாபிஷேகம் பற்றி பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று கலியுகம் துவாபர யுகங்களிலும் பொம்மைகள் அதனை விளக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன.

அம்மன் வேடத்தில் குழந்தைகள்

நிஜ அம்மன்கள்:

பொம்மைகள் தவிர்த்து பார்வையாளர்களை கவரும் வண்ணம் நிஜ அம்மன் போல சிறுமிகளுக்கு அம்மன் வேடமிட்டு ஒரு வாரமாக காட்சிப்படுத்தி வருகின்றனர். இன்று கன்னியாகுமரி அம்மன், மாரியம்மன், துர்க்கையை காட்சிப்படுத்தி இருந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கொலு கண்காட்சி

நவராத்திரி திருவிழா இன்று விஜய தசமியோடு நிறைவு பெற உள்ள நிலையில் ஏராளமான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றனர்.

இது போக வந்த பார்வையாளர்களுக்கு ஆன்மிக அறிவுரைகளும், தியானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வும் வழங்கினர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar