Home /virudhunagar /

விருதுநகர் நகராட்சி சுடுகாட்டிற்குள் குப்பை கொட்டப்படும் அவலம்.. மின் மயானமாக மேம்படுத்தப்படுமா?

விருதுநகர் நகராட்சி சுடுகாட்டிற்குள் குப்பை கொட்டப்படும் அவலம்.. மின் மயானமாக மேம்படுத்தப்படுமா?

விருதுநகர்

விருதுநகர் குப்பை கிடங்கு அருகில் நகராட்சி சுடுகாடு..

Virudhunagar District News | விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ளது நகராட்சி சுடுகாடு. சுடுகாட்டிற்குள்ளும் நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சுடுகாடு போதிய பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது.

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ளது நகராட்சி சுடுகாடு. இதை நகராட்சியின் முத்துராமன் பட்டி மற்றும் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 12 சமுதாய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அல்லம்பட்டி கூரைக்குண்டு   பஞ்சாயத்திற்கென தனி சுடுகாடு இல்லாத காரணத்தால் அவர்களும் நகராட்சி சுடுகாட்டையே பயன்படுத்தி வருகின்றனர்.

விருதுநகர் குப்பை கிடங்கு அருகில் நகராட்சி சுடுகாடு..


இதன் அருகே நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளதால் சுடுகாட்டிற்குள்ளும் நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவியலாக காணப்படும் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தினசரி 2 உடல்கள் எரியூட்டப்படும் நிலையில் அவை குப்பைகளுக்கு நடுவே எரிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது,

விருதுநகர் குப்பை கிடங்கு அருகில் நகராட்சி சுடுகாடு..


மேலும் அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுவதால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. ஈம சடங்கு செய்ய கட்டப்பட்ட குளியல் தொட்டியும் பல ஆண்டுகளாக மாசடைந்து காணப்படுகின்றது. இதனால் சுடுகாட்டிற்கு வருவோர் இதை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சேதமடைந்த சுடுகாட்டின் சாலைகளை புணரமைத்து சுடுகாட்டை மின் மயானமாக மாற்றி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி