முகப்பு /விருதுநகர் /

தினமும் கறி சோறு தான்.. தெருநாய்களுக்கு உணவளிக்கும் விருதுநகர் மெக்கானிக்!

தினமும் கறி சோறு தான்.. தெருநாய்களுக்கு உணவளிக்கும் விருதுநகர் மெக்கானிக்!

X
தெருநாய்களுக்கு

தெருநாய்களுக்கு உணவளிக்கும் மெக்கானிக்

Virudhunagar News : தெருவோர நாய்களுக்கு தினசரி உணவளித்து வருகிறார் விருதுநகர் மாவட்டத்தை சேரந்த மெக்கானிக்.

  • Last Updated :
  • Virudhunagar, India

தெருவோர நாய்களுக்கு தினசரி உணவளித்து அவற்றின் பசியாற்றி விலங்குகளின் பாதுகாவலனாக வலம் வருகிறார் விருதுநகர் மெக்கானிக் சிவயோகன்.

விருதுநகர் லக்ஷ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவயோகன். மெக்கானிக்கான இவர், மதுரை சாலையில் சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். தினசரி வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு செல்பவர் திரும்ப மாலை 4 மணிக்கு பாத்திரத்தில் சாப்பாடு கட்டி கொண்டு வண்டியை எடுத்து கொண்டு, சாலையோரங்களில் ஆங்காங்கே சுற்றி திரியும் நாய்களுக்கு உணவளித்த படியே ஒர்க் ஷாப் வருகிறார்.

அங்கேயும் வந்த உடன் வேலையை பார்க்காமல் அங்கேயும் அருகில் உள்ள நாய்களுக்கு உணவளித்து விட்டு தான் பின்னர் வேலையை பார்க்க தொடங்குகிறார். பின் மீண்டும் இரவு கடையை பூட்டி விட்டு திரும்பவும் நாய்களுக்கு உணவளித்த படியே வீட்டிற்கு செல்கிறார். இப்படி ஒரு நாளைக்கு 2 வேளை உணவளித்து வருகிறார். அதுவும் கறி சோறு தான் என்று கூறிய சிவயோகன் கடந்த 30 ஆண்டுகளாக நாய்களுக்கு உணவளித்து வருவதாக தெரிவித்தார்.

தெருநாய்களுக்கு உணவளிக்கும் விருதுநகர் மெக்கானிக்

இதையும் படிங்க : மதுரையில் வருகிறது மெட்ரோ... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர்...!

பொதுவாக கடவுள் மீது நம்பிக்கை அதிகம் கொண்ட சிவயோகன் நாய்களை பைரவராக பார்க்கிறார். நாய்களை முறையாக பராமரித்தால் தனது தொழில் நல்லபடியாக நடப்பதாக நம்புகிறார். ஒரு நாளைக்கு 25 கிலோ அரிசி போட்டு சமைப்பதாக கூறும் அவர் இதற்காக செலவை எப்படி சமாளிக்கிறீர் என கேட்டபோது, அரிசி மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று கொள்வதாகவும், இதர செலவுகளை தனது வருமானத்தில் இருந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “அவனுங்களுக்கு (நாய்களுக்கு) போக தான் எல்லாம்”என்று புன்னகையுடன் கூறுகிறார். நாய்களுக்கு உணவளிப்பதோடு மட்டும் அல்லாமல் அவைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டு பராமரித்து வரும் சிவயோகன் வீட்டில் நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போட்டு, கருத்தடை செய்து பராமரித்தாலே தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்கிறார்.

தெரு நாய்களுக்கு உணவளித்து உதவ விரும்புவோர் 94431 57374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

First published:

Tags: Local News, Virudhunagar