ஹோம் /விருதுநகர் /

நூற்றாண்டு கடந்த பழமையான கடிகாரங்கள்- ஆர்வமாக சேகரித்துவைத்துள்ள விருதுநகர் நபர்

நூற்றாண்டு கடந்த பழமையான கடிகாரங்கள்- ஆர்வமாக சேகரித்துவைத்துள்ள விருதுநகர் நபர்

பழங்கால

பழங்கால கடிகாரங்கள்

Virudhunagar vintage clocks | விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த எட்வர்ட் என்பவர் பழங்கால கடிகாரங்களை ஆர்வத்துடன் சேகரித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India

இன்றைய சூழலில் ரோட்டில் செல்லும் போது வழிமறித்து மணி என்ன என்று கேட்டால் கையில் வாட்ச் கட்டியிருந்தாலும் சட்டென்று மொபைலை எடுத்து தான் பார்ப்போம். அந்த அளவுக்கு வாட்ச் மற்றும் கடிகாரங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அதிலும் அனைத்துமே டிஜிட்டல் தான். சின்ன முள்ளு, பெரிய முள்ளு கணக்கெல்லாம் இங்கு தேவையில்லை.

இதனாலேயே நிறைய இளசுகளுக்கு இன்று சாதாரண கடிகாரங்களை விரும்புவதில்லை. அந்த அளவுக்கு டிஜிட்டல் கடிகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டரி இல்லா கடிகாரங்கள்:

தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரங்கள் பேட்டரி இன்றி இழு விசையால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன என தெரிந்தால் நிச்சயம் வியப்படைவீர்கள். ஆம்.. முதன் முதலில் வந்த கடிகாரத்தில் பேட்டரிகள் கிடையாது. அவை யாவும் பொம்மைக்கு கொடுக்கும் சாவி போன்ற சாவியின் உதவியினால் இயங்கின.

பழங்கால கடிகாரங்கள்

இத்தகைய பழங்கால கடிகாரங்களை சேகரித்து வருகிறார் சிவகாசியை சேர்ந்த எட்வர்ட். அவரிடம் 1900-ம் ஆண்டின் தொடக்கம் முதல் 1980 வரையிலான கடிகாரங்கள் உள்ளன. அத்தனையும் இன்று காண்பதற்கு அரிய பொருட்கள்.

பழங்கால கடிகாரம்

சுவர் கடிகாரங்கள், கை கடிகாரங்கள் மற்றும் அலாரம் என ஒரு மியூசியம் வைக்கும் அளவிற்கு கடிகார குவியலை காண முடிந்தது.

அது மட்டுமல்ல பழைய கடிகாரங்களுக்கு சர்வீஸ் எங்கும் கிடைப்பதில்லை என்பதால் இவரே பழைய கடிகாரங்களை சர்வீஸ் செய்து தருகிறார்.

பழங்கால கடிகாரம்

சர்வீஸ் தட்டுப்பாட்டால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பழங்கால கடிகாரங்கள் பழுது நீக்க வருவதாக தெரிவித்தார் எட்வர்ட். உங்களிடம் இருக்கும் பழைய கடிகாரங்களை சர்வீஸ் செய்ய அல்லது பழைய கடிகாரங்களை வாங்க வேண்டும் என்றால் 82708 32827 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar