ஹோம் /விருதுநகர் /

ரூ.60க்கு லோ-பட்ஜெட் பிரியாணி.. விருதுநகரில் வரவேற்பை பெற்ற சாலையோர கடை..

ரூ.60க்கு லோ-பட்ஜெட் பிரியாணி.. விருதுநகரில் வரவேற்பை பெற்ற சாலையோர கடை..

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News : விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலுள்ள 60 ரூபாய் பிரியாணி கடை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்றால், நம்மில் பலருக்கும் பிரியாணி என்பது தான் பதிலாக இருக்கும். அந்த அளவுக்கு இன்று பிரியாணி நிறைய பேருக்கு விருப்ப உணவாக உள்ளது.

அதிலும் பிரியாணியை வீட்டில் சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், நிறைய பேருக்கு ஹோட்டலில் சாப்பிடுவது தான் பிடிக்கும்.அதனால் தான் நம்ம ஊரில் பிரியாணியை மட்டும் தயார் செய்யும் நிறைய பிரியாணி கடைகள் உள்ளன.அப்படி ஒரு உணவகத்துக்கு சென்று ஒரு பிரியாணி வாங்கி சாப்பிட்டால், அதன் விலை குறைந்தது நூறு ரூபாயாவது இருக்கும். அதே பிரியாணி குறைந்த விலையில் பிரியாணி கிடைத்தால் எப்படி இருக்கும்.

விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள சிறிய பிரியாணி கடையில் 60 ரூபாய்க்கு பிரியாணி செய்து அசத்தி வருகிறார் சோபியா பிரியாணி கடை உரிமையாளர் மோகன்.

இது கேள்விப்பட்டு அங்கு சென்ற போது இன்முகத்துடன் வரவேற்று தம்பி என்ன சாப்புடுறீங்கனு கேட்டார்.

எப்புடினே 60-வது ரூபாய்க்கு பிரியாணினு கேட்டதுக்கு, “தம்பி அதிக லாபத்துக்கு விக்காம சரியான விலைல வித்தா நிறைய விக்கும்.. அதுலயே நாம நிறைய சம்பாதிக்கலாம். அது மட்டும் இல்லாம நம்மகிட்ட வர்றவங்க எல்லாம் நடுத்தர கூலி தொழிலாளிங்க. அவங்கலாம் நல்ல சாப்டனும். அதான் இந்த விலைக்கு விற்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க : சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களை அனுமதிக்கும் நேரம் குறைப்பு - முழுவிவரம் இதோ...

மேலும் ஐந்து வருடங்களாக இந்த கடையை நடத்தி வருவதாகவும், முதலில் நாற்பது ரூபாய்க்கு பிரியாணி தந்தாகவும் நமக்கு அதிர்ச்சி தந்தார். எப்புற்றா. என்பது போல அப்போ பிரியாணி சுவைல எதாச்சும் முன்ன பின்ன இருக்குமானு கேட்டதுக்கு “பிரியாணிக்கு எல்லா மசாலாவையும் நானே அரைச்சு தயார் செய்றேன். அதுனால பிரியாணியோட சுவைல எந்த சமரசமும் இருக்காது, அப்படி இருந்தா இத்தன வருஷம் இருக்க முடியாதுல“ என்றார்.

அவர் செல்வது என்னவோ உண்மை தான் குறைந்த லாபத்தில் தரமான பொருட்களை கொடுத்தால் அதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறைந்த விலையில் பிரியாணி சாப்பிட விரும்பும் விருதுநகரில் உள்ள பிரியாணி பிரியர்கள் நேரம் இருந்தால் இந்த அருபது ரூபாய் பிரியாணி கடைக்கு சென்று வரலாம்.

First published:

Tags: Local News, Virudhunagar