ஹோம் /விருதுநகர் /

தெப்பக்குளமாய் காட்சியளிக்கும் விருதுநகர் அல்லம்பட்டி சாலை - பொதுமக்கள் அவதி

தெப்பக்குளமாய் காட்சியளிக்கும் விருதுநகர் அல்லம்பட்டி சாலை - பொதுமக்கள் அவதி

விருதுநகர் அல்லம்பட்டி சாலை 

விருதுநகர் அல்லம்பட்டி சாலை 

Virudhunagar District News: அல்லம்பட்டி பகுதியில் சேதமடைந்துள்ள சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் சேதமடைந்த சாலையில் மழைநீரும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை அதன்பின்னர் மீண்டும் சரி செய்யப்படாமல் உள்ளது.  அல்லம்பட்டி முக்கு ரோட்டில் இருந்து அல்லம்பட்டிக்குள் செல்லும் இந்த சாலை தான் அல்லம்பட்டியின் பிரதான சாலையாக உள்ளது. இந்த வழியாக தான் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர்.

குண்டும் குழியுமாக  உள்ள இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நியூஸ்18 செய்தி வெளியிட்ட நிலையில் சாலை இதுவரை சரி செய்யப்படாமலே உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை அளிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வட்டி இல்லாமல் பயிர் கடன் பெறலாம்.. விருதுநகர் மாவட்ட விவசாயிகளே இதுதான் வழிமுறை..

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில் “மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு நகராட்சியில் வந்த சிலர் சாலையை அளந்து கொண்டிருந்தனர்.சரி சாலையை சரி செய்து விடுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் பள்ளமான இடங்களில் மட்டும் மணல் கொண்டு நிரப்பி விட்டு சென்றுவிட்டனர். தற்போது மழை பெய்து அதன் மேலும் தண்ணீர் நிற்கிறது, இதெல்லாம் எப்போது தான் சரி செய்ய போகின்றனர் என தெரியவில்லை எனத் தெரியவில்லை என்றார்.

நகராட்சி நிர்வாகம் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவில் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை உள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Lack of road facility, Local News, Virudhunagar