நம் வாழ்வின் வசந்த காலம் என்றால் நம்மில் பாதி பேர் நம்முடைய பள்ளி பருவத்தை தான் கூறுவோம். நமது பள்ளி சுழல் வசந்தமானதுக்கு காரணம் நமது பள்ளி சுழலும் நம்முடைய பள்ளி நண்பர்களும் தான். இன்றும் பள்ளி நண்பனை செல்லும் வழியில் எங்காவது பார்த்துவிட்டால் போன வேலையை விட்டு அவர்களோடு சிறிது நேரம் பேசி கொண்டிருப்போம். இங்கே 45 ஆண்டுகளுக்கு பின்பு நண்பர்களை சந்திப்பதற்கென தனியே ஒரு நாளை ஏற்படுத்தி நினைவுகளை பகிர்ந்துள்ளனர் விருதுநகர் கேவிஎஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.
விருதுநகர் கேவிஎஸ் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரையும் சந்திக்க முடிவு செய்து கடந்த ஜனவரி 29ம் தேதி விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வா நண்பா ஒன்றானோம் என்ற தலைப்பில் நண்பர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். 1978ம் ஆண்டில் கேவிஎஸ் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து கலந்து கொண்ட நிலையில் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களையும் அழைத்து அவர்களையும் கவுரவித்தனர்.
அங்கு வந்திருந்த பெரும்பாலனவர்கள் பேரன், பேத்தி எடுத்தவர்களாக இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து பழைய நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில், மீண்டும் இளமை பருவத்திற்கே சென்று பள்ளி செல்லும் மாணவர்களாகி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து பேசிய முன்னாள் மாணவர் வாசுபதி, “நாங்கள் பயின்றபோது தான் முதன் முதலாக பியுசி முறை மாற்றப்பட்டு 11ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டது. இன்றும் அது நினைவில் உள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து நண்பர்களை சந்தித்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்” என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar