Home /virudhunagar /

ரூ.10க்கு இயற்கை உரம் வாங்கலாம்.. காய்கறி கழிவுகளை காசாக்கும் விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி..

ரூ.10க்கு இயற்கை உரம் வாங்கலாம்.. காய்கறி கழிவுகளை காசாக்கும் விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி..

விருதுநகர்

விருதுநகர் கூரைக்குண்டு

Virudhunagar Koorakundu Village | விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி ஆர்.எஸ் நகரில் கூரைக்குண்டு பஞ்சாயத்திற்கென நுண்உர மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி கழிவுகள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து பெறப்பட்டு இரசாயனங்கள் இன்றி இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
திடக்கழிவு மேலாண்மையில் என்ன செய்வது என்று தெரியாமல் அனைத்து நகராட்சிகளும் திணறி வரும் நிலையில் விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம், காய்கறிகழிவுகளை இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி ஆர்.எஸ் நகரில் கூரைக்குண்டு பஞ்சாயத்திற்கென நுண்உர மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி கழிவுகள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து பெறப்பட்டு இரசாயனங்கள் இன்றி இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சேகரிக்கப்படும் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் முதலில் தரம் பிரிக்கப்பட்டு பின்பு நன்கு அரைக்கப்படுகிறது.
இதனுடன் கழிவுகளை சிதைக்கும் நுண்ணுயிரிகளை தோற்றுவிக்க ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. பின்னர் இக்கழிவுகள் தொட்டியில் 42 நாட்கள் வைக்கப்பட்டு நுண்ணுயிர்கள் மூலம் சிதைக்கப்படுகின்றன. அதன் பின்னர் சிதைக்கப்பட்ட கழிவுகள் காய வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் அரைக்கப்பட்டு,சல்லடை மூலம் சலிக்கப்பட்டு உரமாக பேக் செய்யப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கிலோ 10 ரூபாய் என்ற வகையில் தற்போது ஐந்து கிலோ பைகளில் விற்கப்படுகிறது. கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து இயற்கை உரங்கள் வாங்க விரும்புவோர் 90809 11164, 63812 05191 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி