Home /virudhunagar /

கீழப்பூலாங்கால் மாட்டு வண்டி பந்தயம்; ஏராளமான காளைகள் பங்கேற்பு

கீழப்பூலாங்கால் மாட்டு வண்டி பந்தயம்; ஏராளமான காளைகள் பங்கேற்பு

கீழப்பூலாங்கால்

கீழப்பூலாங்கால் மாட்டு வண்டி பந்தயம்-சீறிப்பாய்ந்த காளைகள்-காளையர்கள்

விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே உள்ள  கீழப்பூலாங்கால் அருள்மிகு வீரசக்கதேவி திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவையொட்டி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக?

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே உள்ள கீழப்பூலாங்கால் அருள்மிகு வீரசக்கதேவி திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவையொட்டி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரளச்சி அருகே உள்ள அருள்மிகு வீரசக்கதேவி திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை யொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் விருதுநகர் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் மதுரை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. இப்போட்டி சிறிய மற்றும் பெரிய மாடலுக்கு என இரண்டு வெவ்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன.

    முதலில் பெரிய  மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடைந்து  முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அதேபோல் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில்  10 கிலோ மீட்டர் இலக்கை அடைந்த முதல் மூன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

    போட்டியில் பங்கேற்ற காளைகள் ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்தன. சாலையின் இரு புறத்திலும் பொதுமக்கள் மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில்  ராமநாதபுரம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உக்கிரபாண்டி மாடு வெற்றி பெற்று முதல் பரிசான ரூபாய். 40,001 வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக கம்பத்துபட்டி விஜய் பாண்டியின் காளைக்கு ரூபாய் 35,001, மூன்றாவது பரிசாக  ராமநாதபுரம் மாவட்டம் வேப்பங்குளம் நல்லு காளைக்கு ரூபாய் 30,000  வழங்கப்பட்டது.

    அதேபோல் சிறு மாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடம் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம்கே.வேப்பங்குளம் தங்க அரியநாச்சி மாட்டுக்கு ரூபாய் 30,001 ம், இரண்டாவது பரிசாக ரூ.25001 பூலாங்கால் அப்ஸரா குட்டி மாட்டுக்கும், மூன்றாவது பரிசாக அதே கிராமத்தைச் இகமது பூஜாரி காளைக்கு ரூபாய் 20,001  வழங்கப்பட்டது.
    இப்போட்டியில் மொத்தம் 20 ஜோடி காளைகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் ஆறு  ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 14 காளை ஜோடிகளும் பங்கேற்றனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி