வீட்டை விட்டுவெளியில் வந்து பெண்கள் பலர் சாதித்து வந்தாலும் இன்றும் பல பெண்கள் திறமைகள்இருந்தும் வீட்டில் முடங்கியிருக்கும் நிலை உள்ளது. அப்படி இருக்கையில் சாதிக்க களம் ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் வீட்டில் இருந்தே ஆபரணங்கள் தயாரித்து அசத்தி வருகிறார் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர்.
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சுந்தரி. இல்லத்தரசியான இவர் கைவினைப்பொருளாக வீட்டில் இருந்தபடியே ஆபரணங்கள் தயாரித்து தற்போது தொழில்முனைவோராகவும் வளர்ந்து வருகிறார். தற்போது அரசு கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்து ஆபரணங்களை விற்பனை செய்து வரும் இவர் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறார்.
இதுகுறித்துபேசிய சுந்தரி, ’கல்லூரி படிக்கும் போதே தனக்கு தேவையான ஆபரணங்களை தானே செய்து பயன்படுத்தி வந்ததாகவும், கல்லூரியை முடித்து விட்டு சிறிது காலம் வெளியில் வேலைக்கு சென்ற போது ஆபரணங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் வேலைக்கு செல்ல முடியாமல் போனது என்றும் அப்போது தான் அரசு நிறுவனமான RSETI மூலம் கிராமபுற பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி தருவதாக தெரிந்து கொண்டு அதில் சேர்ந்து, ஆபரணங்கள் தயாரிப்பு மட்டும் அல்லாமல் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று பல விஷயங்கள் தெரிந்து கொண்டு பின்னர் லோன் பெற்று தற்போது சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.
இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதன் மூலம் கண்டிப்பாக இன்னும் நான்கு பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரூ.300 முதல் Customised காதலர் தின பரிசுகள்.. தேனியில் இப்படி ஒரு கடையா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar