ஹோம் /விருதுநகர் /

பொன்னியின் செல்வன் முதல்... நூர்ஜஹான் வரை... பழங்கால நாணயங்கள் சேகரிக்கும் சிவகாசி காயின்ஸ் ராஜராஜன்..

பொன்னியின் செல்வன் முதல்... நூர்ஜஹான் வரை... பழங்கால நாணயங்கள் சேகரிக்கும் சிவகாசி காயின்ஸ் ராஜராஜன்..

பழங்கால

பழங்கால நாணயங்கள் சேகரிக்கும் சிவகாசி காயின்ஸ் ராஜராஜன்

Virudhunagar District News : பழங்கால நாணயங்கள் சேகரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார் சிவகாசியை சேர்ந்த திரு.ராஜராஜன். இது வரை பாண்டியர், சேரர், சோழர் போன்ற மன்னர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

நாம் அனைவருமே ஒரு சில விஷயங்களை விரும்பி அதை அதீத ஈடுபாட்டுடன் செய்வோம்.அந்த விஷயம் ஓவியம் வரைதல், நடனமாடுவது இப்படி எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அது நம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

அந்த வகையில் பழங்கால நாணயங்கள் சேகரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சிவகாசியை சேர்ந்த காயின்ஸ் ராஜராஜன். இதுவரை பாண்டியர், சேரர், சோழர் போன்ற மன்னர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.

அந்த ஒவ்வொரு நாணயங்களுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது என்று நாணயங்கள் பற்றி புன்னகையுடன் விவரித்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் நாணயங்கள் மட்டுமல்ல மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கலைப்பொருட்களை சேகரித்து வைத்துள்ளதாகவும், அவையெல்லாம் தனது தாத்தா மற்றும் தந்தையின் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை என்று கூறினார்.

இதையும் படிங்க : வீழ்ச்சியடைந்த கொய்யா விலை.. வேதனையில் மரத்தை எரிக்கும் விருதுநகர் விவசாயிகள்..!

இவற்றை தற்போது பள்ளி மாணவர்களுக்கு கண்காட்சி அமைத்து விளக்கி வருவதாகவும் கூறி நமக்கும் நாணயங்களை பற்றி விவரிக்க தொடங்கினார்.

நூர்ஜஹான் நாணயம்:

இந்தியாவை முகலாயர்கள் ஆண்டபோது நிறைய நாணயங்களை வெளியிட்டனர். ஷாஜகான் பதவியில் இருந்தபோது ஒருமுறை அவருக்கு உடல்நலம் குன்றிவிடவே அவரது மனைவி நூர்ஜஹான் அரச பதவியேற்றார். அப்போது அவர் வெளியிட்ட நாணயம் என்று ஒரு நாணயத்தை காட்டி, பிற்காலத்தில் ஷாஜகான் மீண்டும் மன்னராக பதவியேற்ற பின்னர் இந்த நாணயம் மீண்டும் அரச கஜானாவிற்கே திரும்ப பெறப்பட்டது. அதில் ஒன்று எப்படியோ தப்பி நம்மிடம் வந்து விட்டது என்றார்.

பொன்னியின் செல்வன் நாணயம் :

புலியும், மீன்களும் இருக்கும் நாணயத்தை காட்டி இந்த நாணயம் பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் ஆதித்த கரிகாலன் பாண்டிய மன்னனை வென்றதற்காக அவனின் மெய்க்கீர்த்தியாக புலியின் கீழ் மீன் இருப்பதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது என்று காட்டினார்.

இதேபோல் பாண்டியர், சேரர், சோழர் பல்லவர் கால நாணயங்கள் மற்றும் சந்திர குப்தர் , அசோகர் மற்றும் முகலாய மன்னர் கால நாணயங்கள் பல இவரின் சேகரிப்பில் காண முடிந்தது.

இதையும் படிங்க : கணவர் இறந்த நிலையில் வீட்டை காலி செய்ய மிரட்டும் கொழுந்தன்... கலெக்டர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க மனு

இந்திய மன்னர்கள் மட்டுமல்ல அலெக்சாண்டர், செங்கிஸ்கான் கால நாணயங்கள் மற்றும் இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களும் உள்ளன என்று அவற்றை காட்டினார்.

தாத்தா மற்றும் தந்தையை தொடர்ந்து தனக்கும் வரலாறு மீது ஏற்படவே பழங்கால கலைப்பொருளை சேகரித்து பாதுகாத்து வருகிறார் இந்த ராஜராஜன். வயதான காலத்திலும் இவரது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு வரலாற்று நாணயங்களை பார்த்த நிறைவோடு விடை பெற்றோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar