முகப்பு /விருதுநகர் /

அனைத்துதுறை அமைச்சர்கள்.. அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

அனைத்துதுறை அமைச்சர்கள்.. அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

X
பள்ளி

பள்ளி மாணவர்கள்

Virudhunagar | விருதுநகரிலுள்ள அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்கிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

ஏட்டுக் கல்வியோடு மட்டும் இல்லாமல் நாட்டு நடப்பையும் படிக்கும் வகையில் சிறுவயது முதலே அரசியல் பற்றியும் படித்து பொது அறிவை வளர்த்து வருகின்றனர் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள அலமேலுமங்கைபுரம் கிராம தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள குக்கிராமத்தில் உள்ளது அரசுத் தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், கல்வி மட்டுமல்லாது இதர செயல்பாடுகளிலும் அதீத ஆர்வம் காட்டி வருவதாக கேட்டறிந்து அப்பள்ளிக்கு நேரில் சென்ற போது மாணவர்களின் திறன்கள் நம்மை ஆச்சரியப்படுத்தின.

துறைவாரியாக அமைச்சர்கள்:

சாதாரணமாக நம்மிடம் எதாவது அமைச்சரவையின் பெயர் சொல்லி அதன் அமைச்சர் யாரென்று கேட்டால் நாம் சற்று யோசிப்போம். அந்த அளவுக்கு தான் இன்றைய இளையோர்களுக்கு அரசியல் பற்றிய அறிவும் புரிதலும் உள்ளது. எவர் ஒருவர் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறரோ அவர் பற்றி தான் இன்றைய இளைஞர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சரளமாக முக்கிய அமைச்சரவையினுடைய அமைச்சர்களின் பெயர்களை சரியாக சொல்லி அசத்தி வருகின்றனர் இந்த மாணவர்கள். உதாரணமாக ஒரு மாணவரிடம் பள்ளிகல்வி துறை அமைச்சர் பெயர் கேட்டு அவன் அதற்கு சரியாக சொன்னால் அவரின் பெயர் அடிக்கடி பள்ளிகளில் பேசப்பட்டு இருக்கும் அதனால் என்று கூறிவிடலாம்.

ஆனால் இவர்களோ அதையும் தாண்டி அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பால் வளத்துறை போன்ற அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பெயர்களையும் விரல் நுனியில் வைத்துள்ளனர்.

தேனி | கிணற்றில் தவறி விழுந்த கடாமான் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

இதெல்லாம் எப்படி சாத்தியம் என கேட்ட போது தங்களின் ஆசிரியர் தினமும் காலை சிறிது நேரம் ஒதுக்கி பொது அறிவு பற்றி கற்று தருகிறார். அதில் கற்று கொண்டவை தான் இவை என்று க்யூட்டான குரலில் பதில் தருகின்றனர் அலமேலு மங்கைபுர கிராம மாணவர்கள்.

First published:

Tags: Local News, Virudhunagar