விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ளது கோபாலபுரம் கிராமம். இங்கிருந்து பாலவந்தம் செல்லும் சாலையில் குறுக்கே ரயில்வே இருப்பு பாதை ஒன்று உள்ளது.
இந்த ரயில்வே பாதையை கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் மழைக்காலத்தில் இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியபடி இருப்பதால் இப்பாதையை முழுமையாக பயன்படுத்த இயலாத நிலை காணப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற சுரங்க பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கென வடிகால்கள் அமைப்பது வழக்கம். அப்படி இந்த கோபாலபுரம் பாலவநத்தம் சாலையிலும் மழைநீரை வெளியேற்றுவதற்கென வடிகாலும், உறைகிணரும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இங்கு மழைநீர் தேங்கி வருவதால் இவ்வழியாக கடந்து செல்வோர் ஒருவித அச்ச உணர்வுடனே செல்கின்றனர்.
இதையும் படிங்க : தேசிய திறனறி தேர்விற்கான கருத்தரங்கம்.. விருதுநகர் அரசு பள்ளியில் நடைபெற்றது..
விருதுநகர் செல்ல கோபாலபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கோவிலாங்குளம், கட்டங்குடி, பாலையம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் இப்படி தண்ணீர் தேங்கியுள்ளதால் இவ்வழியே செல்ல சிரமமாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த பகுதி முழுவதும் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால், தண்ணீர் தேங்கியிருக்கும் சுரங்கப்பாதையை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் இதனை விரைந்து சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar