முகப்பு /விருதுநகர் /

அரை மணி நேரம் முட்டை மீது அமர்ந்து யோகாசனம்.. விருதுநகர் சிறுமிகள் அசத்தல்!

அரை மணி நேரம் முட்டை மீது அமர்ந்து யோகாசனம்.. விருதுநகர் சிறுமிகள் அசத்தல்!

X
சாதனை

சாதனை படைத்த சிறுமிகள்

Virudhunagar yoga | விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த இரு சிறுமிகள் யோகாசனத்தில் உலக சாதனை படைக்கும் நோக்கில் முட்டை மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் சிறுமிகளான சுகானா மற்றும் வைரலட்சுமி இருவரும்முட்டை மீது அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த சின்ன வைரவன் மற்றும் ரோகிணி தம்பதியரின் மகள்கள் வைரலட்சுமி மற்றும் சுகானா. சகோதரிகளான இவர்கள் சிறுவயதிலேயே யோகா கலையில் ஆர்வம் ஏற்படவே இருவரும் முறையாக யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் யோகாவில் சாதனை படைக்கும் நோக்கில் இருவரும் முட்டை மீது அமர்ந்து தொடர்ந்து அரை மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இதற்காக சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி சுகானா 120 முட்டைகள் மேல் அமர்ந்து தொடர்ந்து 30நிமிடம் யோகாசனம் செய்தும், சிறுமி வைரலட்சுமி 30 முட்டைகள் மேல் அமர்ந்து இரு கைகளாலும் தண்ணீர் டம்ளர்களை பிடித்தவாறு தொடர்ந்து 30நிமிடம் யோகாசனம் செய்தனர். உலக சாதனை படைத்த இருவரும் நோபல் புக் ஆஃப் ரிக்காட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிகழ்வுக்கு நோபல் புக் ஆஃப் ரிக்காட்ஸ் அமைப்பின் சிஇஓ அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.

First published:

Tags: Local News, Virudhunagar, World record, Yoga