முகப்பு /விருதுநகர் /

செண்பக தோப்பு பகுதியில் நக்சலைட் நடமாட்டம்? யாரும் போகாதீங்க.. எச்சரிக்கும் வனத்துறை!

செண்பக தோப்பு பகுதியில் நக்சலைட் நடமாட்டம்? யாரும் போகாதீங்க.. எச்சரிக்கும் வனத்துறை!

விருதுநகர் செண்பக தோப்பு பகுதி

விருதுநகர் செண்பக தோப்பு பகுதி

Virudhunagar | சென்னை சைபர் கிரைமுக்கு இந்த பகுதியில் சாட்டிலைட் சிக்னல் கிடைத்துள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணி தீவிரம்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Srivilliputhur | Virudhunagar

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பகுதியில் சாட்டிலைட் போன் பயன்பாடு மற்றும் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் வனத்துறை கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் செண்பகத் தோப்பு வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின்பு வனப்பகுதியில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் வனப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயில் மற்றும் மலை மீதுள்ள காட்டழகர் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு வனத்துறை 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு செண்பக தோப்பு வனப்பகுதியில் சாட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளது.

ALSO READ | "பாபா படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும்" - விருதுநகர் ரசிகர்கள் கருத்து

நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்க கூடுமோ என்ற கோணத்தில் வனத்துறை போலீசார்வனப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். வனப்பகுதியில் யாரும் தங்கி இருந்ததற்கான சான்றுகள் கிடைக்காத நிலையில், பாதுகாப்பு கருதி மலையில் உள்ள காட்டழகர் கோவிலுக்கு செல்ல சில கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. இதன் படி காலை 6 மணிக்கு மலையேறுபவர்கள் மாலை 6 மணிக்குள் கீழே இறங்கிவிட வேண்டும்.

கோவில் நிர்வாகிகள் உட்பட யாரும் இரவில் மலையில் தங்க கூடாது, கோவில் நிர்வாகத்தை தவிர வேறு யாரும் அன்னதானம் வழங்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.

First published:

Tags: Forest Department, Local News, Naxal Attack, Virudhunagar