மிளகாய் வத்தல் எனப்படும் சிவப்பு மிளகாய் தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் ராமநாதபுரம் பகுதியில் விளையும் வத்தல்களும் விருதுநகர் சந்தையில் தான் சந்தைப்படுத்தபடுகின்றன. அதனாலேயே விருதுநகர் மிளகாய் வத்தலுக்கு தனி மவுசு உண்டு.
இந்த சம்பா ரக மிளகாய் வத்தல்கள் விருதுநகரில் அருப்புக்கோட்டை, சாத்தூர் பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் நிலையில் ஆந்திர மிளகாயை விட விருதுநகர் மிளகாய் வத்தலுக்கு தான் காரம் அதிகம் என்கிறார் செந்நெல்குடி கிராமத்தில் 40 ஆண்டுகளாக வத்தல் சாகுபடி செய்து வரும் விவசாயி சண்முகம்.
இதுகுறித்து பேசிய அவர், “வத்தல் என்பதும் மானாவாரி போன்று தான் வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். இதற்கு இயற்கையில் பெரிதாக நோய் தாக்கம் ஏற்படுவதும் குறைவு. நெற்பயிர் போல இதையும் நாற்று வளர்த்து பின்பு பிரித்து நட வேண்டும்.
வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டு உரங்கள் போட்டு பராமரித்து வந்தால் செடிகளில் மிளகாய்கள் காய்க்க ஆரம்பிக்கும். அதை அப்படியே பழுக்க விட்டு பின்பு மிளகாய் பழத்தை நிலத்தில் நிரப்பி இரண்டு மூன்று நாட்கள் காய வைத்தால் மிளகாய் வத்தல் ரெடி ஆகிவிடும்.
பின்னர் அதை எடுத்து சென்று அதை கொண்டு சென்று விருதுநகர் சாத்தூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. பெரும்பாலும் ஆடி மாதங்களில் விதை விதைக்கப்பட்டு தை மாதத்தில் மிளகாய்கள் மகசூல் செய்யப்படுகின்றன.
விருதுநகர் பகுதியில் பெரும்பாலும் சம்பா வத்தல்கள் தான் பயிரிப்படுகின்றன. ஆனால் முன்பு போல் இதில் பெரிய வருமானம் இல்லை. அதனாலேயே வத்தல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக தெரிவித்தார். ஆள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு, பருவமழை குறைவு போன்றவைகளும் வத்தல் மகசூலை பாதிக்கின்றன” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், “உற்பத்தி அடிப்படையில் ஆந்திர மிளகாய்கள் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தாலும், சுவைக்காக விருதுநகர் சம்பா வத்தல்கள் அதிகளவில் தேடப்பட்டு வருகின்றன. விருதுநகரின் அடையாளமாக விளங்கும் இந்த சம்பா வத்தல்கள் சாகுபடி குறைந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது” எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar