முகப்பு /விருதுநகர் /

சிம்புவுக்கு இது ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்! - பத்து தல படம் பார்த்த விருதுநகர் ரசிகர்களின் ரிவ்யூ!

சிம்புவுக்கு இது ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்! - பத்து தல படம் பார்த்த விருதுநகர் ரசிகர்களின் ரிவ்யூ!

X
பத்து

பத்து தல படம் பார்த்த விருதுநகர் ரசிகர்களின் ரிவ்யூ

Pathu Thala Movie : நடிகர் சிலம்பரசன் நடித்த பத்து தல திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், விருதுநகரில் படம் பார்த்த அவரின் ரசிகர்கள் படம் சிறப்பாக வந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான படம் பத்து தல. ஓபிலி கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் ப்ரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கும் சுழலில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதிலும் குறிப்பாக சிம்பு மாறுபட்ட புதிய தோற்றத்தில் இப்படத்தில் வருகிறார் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது படம் வெளியாகியுள்ளது.

சென்டிமென்ட் vs கேங்ஸ்டர் :

படம் பார்ப்பதற்கு கேங்ஸ்டர் படம் போல் இருந்தாலும் படத்தின் ஹை லைட்டே அண்ணன் தங்கை சென்டிமென்ட் தான். அது கொஞ்சம் கூட போர் அடிக்காமல் வந்துள்ளது என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள். வழக்கம் போல அல்லாமல் நடிகர் சிம்பு இப்படத்தில் நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளதாகவும், அது ரசிக்கும் படி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்புவுக்கு இணையாக கௌதம் கார்த்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மொத்தத்தில் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை அடுத்து இது சிம்புவுக்கு ஹார்ட்ரிக் ப்ளாக் பஸ்டராக அமையும் என விருதுநகர் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Virudhunagar