ஹோம் /விருதுநகர் /

துணிவு பட ட்ரைலர் குறித்து விருதுநகர் அஜித் ரசிகர்கள் சொன்னது இதுதான்..? 

துணிவு பட ட்ரைலர் குறித்து விருதுநகர் அஜித் ரசிகர்கள் சொன்னது இதுதான்..? 

X
விருதுநகர்

விருதுநகர் அஜித் ரசிகர்கள்

Thunivu Trailer : நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வரவுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தை ஜீ சினிமாஸ் மற்றும் போனி கபூர் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

துணிவோடு கொண்டாடிய ரசிகர்கள் :

துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருந்த நேரத்தில், விருதுநகரில் உள்ள திரையரங்கில் ட்ரெய்லரை திரையிட திட்டமிட்டிருந்தனர். இதற்காக ரசிகர்கள் மாலை 5 மணியில் இருந்தே திரையரங்கு முன்பு கூட தொடங்கிவிட்டனர். ட்ரைலருக்காக காத்திருந்த ரசிகர்கள் மேளம் கொட்டி திருவிழா போல இந்த நிகழ்வை கொண்டாடினர்.

இதையும் படிங்க : கலெக்டர் அலுவலகத்தில் உலா வரும் நாய்கள்... விருதுநகரில் பொதுமக்கள் அச்சம்..

7 மணிக்கு திரையில் அஜித்குமாரை பார்த்த ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டிய நிலையில் திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களை விட ட்ரைலர் பார்க்க வந்தவர்களே அதிகம் காணப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் திரையில் அஜித் குமார் மாஸ் காட்டி விட்டதாகவும், துணிவிற்காக துணிவோடு காத்திருப்பதாகவும் கூறினர்.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Actor Ajith, Ajith fans, Local News, Virudhunagar