முகப்பு /விருதுநகர் /

பேப்பரில் சோபா, டிவி.. மினியேச்சரில் அசத்தும் விருதுநகர் இளைஞர்!

பேப்பரில் சோபா, டிவி.. மினியேச்சரில் அசத்தும் விருதுநகர் இளைஞர்!

X
விருதுநகர்

விருதுநகர் ஓவியர்

Virudhunagar news | விருதுநகரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் குட்டி சோஃபா மற்றும் டீவி என குட்டி கலைப்பொருட்களை தயாரித்து அசத்தி வருகிறார்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பல்வேறு கலை பொருட்களை கையால் செய்து அசத்தி வருகிறார்.

ஆர்ட் என்றாலே வெறும் பென்சில் கொண்டு ஓவியம் தீட்டுவது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கும் போது, இங்கு இளைஞர் ஒருவர் தஞ்சாவூர் ஓவியம் முதலான பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருவதோடு கலைப்பொருட்கள் தயாரித்து அசத்தி வருகிறார்.

விருதுநகரை சேர்ந்தவர் சிவகுரு கட்டிடக்கலை வல்லுநரான இவர் சிறுவயதிலேயே ஆர்ட் மீதிருந்த ஆர்வம் காரணமாக ஓவியம் வரைதல் முதல் கலைப்பொருட்கள் தயாரிப்பை முறையாக கற்றுக்கொண்டு தற்போது குட்டி சோஃபா, குட்டி குட்டி பொம்மைகள் என பேப்பரிலேயே கலைப்பொருட்கள் தயாரித்து வருகிறார்.

மேலும் விருதுநகர் பகுதியில் ஆர்ட் பற்றிய விழிப்புணர்வே குறைவாக இருக்கும் போது இது போன்ற கலைப்பொருட்கள் தயாரிக்கும் திறமை பலருக்கு இருந்தாலும், அதை சந்தை படுத்தும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் அந்த திறமையை முறையாக பயிற்சி செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லாமல் விட்டு விடுகின்றனர் என்பதால், தன்னால் முடிந்த அளவு சிலருக்கு வார வாரம் ஓவியம் முதல் இது போன்ற கலைப்பொருட்கள் தயாரிப்பு வரை படிப்படியாக சொல்லி தந்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் இந்த இளைஞர்.

இதையும் படிங்க | அல்லம்பட்டி தரைப்பாலத்தில் உள்ள குப்பைகளால் துர்நாற்றம்.. நடவடிக்கை எடுக்குமா விருதுநகர் நகராட்சி?

ஆர்ட் என்றாலே ஓவியம் மட்டுமல்ல அதில் பல வகைகள் உள்ளன என்பதையே நீண்ட தேடலுக்கு பின் தான் கற்றுக்கொண்டதாக கூறும் சிவகுரு, தற்போது ஓரளவுக்கு நேரம் கிடைக்கும் போது ஆர்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

அதிலும் முழுநேரமாக ஆர்க்கிடெட் துறையில் பணியாற்றி வந்தாலும் வார இறுதியில் தனியே நேரம் ஒதுக்கி வருபவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar